ஆஹா ,தேர்தல் வந்தால் அரசியல் வாதிகளுக்கு மக்கள் மேல் எவ்வளவு அக்கறை வருகிறது ?
வடை சுட்டு கொடுப்பதென்ன?
குழந்தைகளை குளிக்க வைப்பதென்ன?
குப்பை எடுப்பது என்ன?
காலில் விழுவது என்ன?
என்ன ..என்ன..என்ன
தேவை இல்லாத புல் செடிகளை வெட்டுவது என்ன?( யாரையும் பழிப்பது எனக்கு பிடிக்காத விஷயம்) ஆனால் அந்த பெண் அந்த வேலைக்கு மட்டுமே தகுதியாக தெரிந்தார்.
இத்தனை நாட்கள் அந்த குப்பை கழிவுகள் கண்ணுக்கு தெரியவில்லையா?
இத்தனை நாட்கள் அந்த தெருவில் தண்ணீர் வருவதில்லை என தெரியவில்லையா?
ஒரு தன்னார்வலர் அமைப்பை வைத்து இதையெல்லாம் சரி செய்திருக்கலாமே ?
ஒரு வேட்பாளர் '' நான் உங்கள் வீட்டிற்கு தண்ணி கேன் போட்டேன்.அதனால் எனக்கு ஓட்டு போட்டு கவுன்சிலர் ஆக்குங்கள்'' என்று வோட்டு கேட்டாராம்.
இதெல்லாம் ''சரி'' என்று ஒத்து கொண்டாலும் ???
ஜெயித்த பிறகு மக்கள் அவர்கள் வீட்டில் காத்து கிடக்க வேண்டுமே.
தண்ணீர் வரி
வீட்டு வரி
வீடு கட்ட வரி
பைப் லைன் வரி
எல்லை இல்லா அதிகாரம்.
'' '' சிஸ்டம் சரி இல்லப்பா'' ''
இன்னும் 5 வருடங்களுக்கு ராஜாங்கம்தான்.
மக்கள் நிசசயமாக இந்த நாடகங்களை நம்புகிறார்களா?
அல்லது இன்றைக்குத்தானே காலில் விழுகிறான் என்று ரசிக்கிறார்களா?
நாடகம் ,நாடகம் நடக்கிறது.
யாரை குறை சொல்வது??????
1 comment:
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. செய்தி தொலைக்காட்சியை திறந்தாலே இவைகள் எல்லாம் எரிச்சலுடுகின்றன. அதனாலே செய்திகள் பார்ப்பதை தவிர்க்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக கவுன்சிலர்கள் தொல்லை இல்லாமல் அமைதியா நகர்ந்து வந்தது. நேரடியாக அதிகாரிகளே கவனித்து வந்த பொழுது புகார்கள், பட்டுவாடாக்கள் மற்றும் பணம் பெறுவது அல்லது தரகு ஓரளவுக்கு தாங்கும்படி இருந்தது. இனி கவுன்சிலர்களுக்கும் ஒரு பங்கு வகுக்க வேண்டும்.
Post a Comment