About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/07/20

மேட்டூர் அணை

மேட்டூர் அணை +
தேங்காய் பால் :
பழசை மறந்து விடுங்கள் என்று எனக்கு அறிவுரை சொல்கிறார்கள்..
நானும் முயற்சி செய்கிறேன்.
ஆனால்
எல்லா சேனல்களிலும் மேட்டூர் அணைதான் .
என் கணவர் மேட்டூர் அணையின் AEE யாக இருந்தார்.
நேற்று கோலாகலமாக நடந்த விழாவை பார்த்த பொழுது மனம் மிகவும் சோகப்பட்டது.
அவர் இருந்திருந்தால் துள்ளிக் குதித்துக் கொண்டு இருந்திருப்பார்.நேற்று பார்த்த அணையின் மேல் சாலையில் சில அதிகாரிகளின் கார்கள் மட்டுமே செல்லும்.அதில் இவருடையதும் ஒன்று.கவர்னர் வண்டி வந்தால் கூட பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப் படும். ஆனால் இந்த காரின் ஹாரன் சத்தம் கேட்கும் முன்னே கேட் திறக்கப் படும்.
என் கணவர் சிவில் பொறியாளர் என்பதால் அணையின் பராமரிப்பு இவருக்கு.
85 கிலோ எடை அவருடையது.6 அடி உயரம்.
ஒரு முறை அணையில் விரிசல் வர ஆரம்பித்தது.
" " நீங்கள் அணையின் மேல் தொம் தொம்  என்று நடக்காதீர்கள் .அதனால்தான் அணை விரிசல் விடுகிறது "  "
என்று அவரை கலாய்த்த இன்பமான காலங்கள் அவை.
.......   .......
தேங்காய் பால் :
ஆடி மாதம் சேலம் மாவட்டம் களை கட்டி விடும்.எங்கு பார்த்தாலும் மாரியம்மன் பண்டிகைதான்.
தேங்காய் சுடும் நோம்பி ( நோன்பு என்பதுதான் நோம்பி என்றாகி விட்டது.)
என் இனிய சேலத்து மக்களே.!!!!!!!!!!!!!!!!
அந்த slang ...சொல்ல முடியாது.ச் ச் சும்மா கலக்கியடிக்கும்
என்னுடையது சுத்த தமிழ். அந்த கிராமத்து மக்களுக்கு என் தமிழ் புரியாது.
எனக்கு அவர்கள் பேசுவது புரியாது.(நானும் கிராமம்தான் .ஆனால் சுத்த தமிழ் பேசுவேன் )
ஒரு நாள் 8 வழி சாலை குறித்து தந்தி டி .வி யில் ஒரு சேலத்துக்காரர் பேசினார்.
பாவம் அசோகா .
தன் அழகிய கண்களை விரித்து விரித்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள படாத பாடு பட்டார் .
என் இனிய சேலத்து மக்களே.!!!!!!!!!!!!!!!!
தேங்காய் பால் விஷயத்திற்கு வருவோம்.ஹரிகேச நல்லூர் சொல்லிக் கொண்டிருந்தார்.இந்த ஆடி மாதம் புது புனல் நோய்களையும் கொண்டு வரும் அதற்கு நோய் எதிர்ப்பு கொடுக்க வல்லது தேங்காய் பால் என்று.
தேங்காயை உரசி மொழு மொழு என்று செய்து ஒரு கண்ணை துளையிட்டு பாதி தண்ணீரை எடுத்து விட்டு எள் +வெல்லம்+அரிசி+ ஏலக்காய் எல்லாம் அந்த கண் வழியாக தேங்காய்க்குள் போட்டு புரசை குச்சியால் கண்ணை மூடி நெருப்பில் சுட்டு ,பின் அதை உடைத்து சாப்பிட்டால் ...பெரிய இனிப்பு பலகாரம் அது.
ஆனால் பெரிய அறிவியல் சார்ந்த விஷயம்.உடலுக்கு வலிமையையும்,நோய் எதிர்ப்பு சக்தியும் தரும்.அதே போல் அம்மனுக்கு மஞ்சள் +வேப்பிலை கொணட தண்ணீர் ஊற்றுகிறோம் என்று சொல்லி ஊர் முழுக்க அந்த தண்ணீரை எல்லோர் மேலும் ஊற்றுவாரக்ள்.ஒரு ஹோலி பண்டிகைதான்.ஆனால் அவ்வளவும்  நோயிலிருந்து காக்க.
அந்த பழைய நினைவுகள்தான் என் ஊட்ட சத்து உணவு
கார்த்திக் அம்மா

No comments: