About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/07/10

தேவாங்கு :
THE ONLY FACE I HAVE :
With the photographer :
இது ஸ்வாதி சம்பந்தப் பட்ட பதிவு அல்ல .
அந்த பெண் ராம்குமாரை தேவாங்கு என்று சொல்லியதாகவும் அதனால் கொன்றதாகவும் ......
1990களில்  +1படித்தவர்களுக்கு ஆங்கில முதல் பாடமே
"With the photographer "என்ற பாடம்தான். எனக்கு மிகவும் பிடித்த பாடம். ரசித்து நடத்துவேன் அந்த பாடத்தை..அதில் ஒருவர் தான் புகைப்படம் எடுக்க செல்வார்.எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம்தான். எப்போதும் எல்லா photographer ம் சொல்வது போல் ''  '' தலையை இப்படி சாய், கண்ணை மேலே பார்,வாயை நேராக வை ''  என்று சொலவதோடு நில்லாமல்'' ' உன் வாய் இன்னும் சற்று சிறியதாக இருந்திருக்கலாம் கண் சற்று பெரியதாக இருந்திருக்கலாம் ,'' என்ற ரீதியில் சொல்லிக் கொண்டே போவார் .பொறுத்து பொறுத்து பார்த்த ஆசிரியர் அந்த photographer இடம் சொல்வார்
THIS IS MY FACE. 
THE ONLY FACE I HAVE 
சொல்லி விட்டு புகைப் படம் எடுக்காமலே சென்று விடுவார்.
அற்புதமான கருத்து.
எத்தனை ஆசிரியர்கள் இந்த கருத்தை மாணவர்களுக்கு வலியுறுத்தினரோ தெரியவில்லை.
நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை என்ற ரஜினியின் பாடல் வரிகளை (எழுதிய கவிஞர் யாரோ ) சொன்னவுடன் மாணவர்களுக்கு மின்னல் அடிக்கும்.
கருத்து இதுதான். .
ஒருவன் கருப்பாக பிறந்திருக்கலாம்.
சிறிய கண்களுடன் பிறந்திருக்கலாம்.
குட்டையாக  பிறந்திருக்கலாம்.
அந்த உருவத்தை மாற்ற முடியாது.
மாற்றவும் வேண்டாம்.
குணத்தை character ஐ மாற்ற முடியும்.
நல்லவன் மேலும் நல்லவனாக முடியும்.
அதுதான் ஒரு மனிதன் செய்ய வேண்டும்.
நீ அழகாக இல்லை என்று வருந்தாதே.
அது படைப்பு.
அதற்கு பதிலாக உன் ஆளுமையை வளர்த்துக் கொள்
என்பதுதான் ஆசிரியர் சொல்லும் சேதி.
மாணவர்கள்
மிஸ் அந்த கருப்பா ,குட்டையா இருப்பானே
என்று யாரை பற்றியாவது  சொன்னால் காட்டு கத்தல் கத்துவேன்.
ஏன் அப்படி சொல்கிறாய் ? வேறு விதமாக அவனைப் பற்றி சொல்ல முடியாதா ..அந்த 3வது வரிசையில் இருப்பானே
இந்த ஊரிலிருந்து வருவான் என்பது போன்ற வேறு விஷயங்களை சொல்லேன் '' என்று அறிவுரை சொல்வேன்.
இந்த செந்தில் காமெடியனை பண்ணி வாயா ,சட்டி தலையா என்றெல்லாம் உருவத்தை வைத்து காமெடி என்ற பேரில் அராஜகம் செய்வது கண்டு பொங்குவேண்.
காந்தி என்னஅழகு ?
நெல்சன் மண்டேலா என்ன அழகு?
காமராஜ் என்ன அழகு?
அவர்களை ஏன் போற்றுகிறோம்?
அவர்களின் குணம்.
செயல்.
இந்த ராம்குமாரும் அந்த பெண் சொன்னால் (அது உண்மையாய் இருந்தாலும்) அதை விட்டு விட்டு மேற்கொண்டு படித்து,ஒரு ஆராய்சசி ,ஒரு மக்களுக்கு உதவும்படியான கண்டுபிடிப்பு என்ற வழியில் சென்றிருந்தால் உலகம் அவனை எவ்வளவு போற்றியிருக்கும் ?
இளைஞர்களே சிந்தியுங்கள்.
காதல் தேவையில்லாத ஒன்று.
சினிமாக்களை பார்த்து அப்படி ஒரு மாயையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
காதல் என்ற இல்லாத ஒன்றிற்காக உங்கள் நேரத்தையும்,அறிவையும் வீணடிக்காதீர்கள் .
முன்னேறுங்கள் .
கார்த்திக் அம்மா
கலா கார்த்திக்

No comments: