//அவரை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என்பது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள். //
இந்த வார்த்தைகள் கிரேசி மோகனின் சகோதரர் பாலாஜி மன வேதனையுடன் உருக்கமாக வெளியிட்ட விடியோ வின் ஒரு பகுதி.
இந்த உலகம் மாறவே மாறாதா?
எதற்காக அவர் தன் அண்ணாவை கவனிக்காமல் விடுவார்?
மோகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தால் அவரின் நாடக ட்ரூப்பிற்கு தெரியாமல் இருந்திருக்குமா?
அவர் எந்த டாக்டரிடமும் போனதாக யாருமே சொல்லவில்லை.
அப்படி இருக்க அவரது குடும்பம் அவரை சரியாக கவனிக்கவில்லை என்று எப்படி அப்பட்டமாக பழி சொல்வார்கள்? எவ்வளவு மன வேதனை ஏற்பட்டிருந்தால் அவர் இப்படி ஒரு விடியோ வெளியிட்டிருப்பார்?
....2000....
அன்று என் கணவருக்கு திடீரென உடல் நலம் மாறியது.
யாருமே எதிர்பார்க்காத அடி ...இடி..
ராஜ மருத்துவம்.
ஆனால் பலன் இல்லை.
......
அப்போதும் ஊரும் உறவும் இப்படித்தான் சொல்லியது.
நான் சரியாக கவனிக்கவில்லை.
மருத்துவர்கள் சரியாக கவனிக்கவில்லை.
.....எத்தனை குற்ற சாட்டுகள்?????????
எத்தனை மன வலி??????????
கணவரின் இழப்பு என்ற வேதனையை விட இந்த நெருப்பு அம்புகள் தந்த வேதனை....
சாரதா நம்பி ஆரூரான் ஒரு இடத்தில் இது பற்றி சொல்லியுள்ளார்.
அவருக்கும் அதே வேதனை.
...ஆக ....உலகம் மாறவில்லை.
WHAT A SADISTIC PLEASURE ...
ஆ ...
ஆ ...
இவ்வளவு வெற்றியாளனா ???????????
ஆ
விழுந்தானா ???????????
சிரி .சந்தோஷப்படு .என்பதுதான் உலகம்.
வேதனையுடன்
கார்த்திக் அம்மா
No comments:
Post a Comment