About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/06/20

துர்க்கை என் மகள்

1995 மேட்டூர் அணை நகரில் TNEB மின்வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தோம். அருகிலேயே சிவன் கோவில்.
என் அண்ணா கேலி செய்வார்.
''உனக்கு C /OF சிவன் கோவில் என்றுதான் கடிதம் எழுத வேண்டும் ''
அப்படி ஒரு பரம பக்தை.அந்த கோவிலில் இருந்த துர்க்கை சிலை கால் உடைந்து விட்டது.குருக்கள் கோவில் கட்ட சிரம பட்டார்.
என்ன  தோன்றியதோ, ''நான் கட்டுகிறேன் '' என்று சொல்லி விட்டேன்.
அவிநாசியில் சிலை செய்து எடுத்து வந்து கோவில் தண்ணீர் தொட்டியில் வைத்தோம்.
திருமணஞ்சேரி  சுவாமிநாத குருக்கள் வந்து பார்த்தவர்
''அய்யோ ,எதற்கு அம்மனை நீரில் வைத்தீர்கள் ? துர்க்கை எஜமானர் வீட்டில்தானே இருக்க வேண்டும்''  என்றார்.
எனக்கு குழப்பம் .
யார் அந்த எஜமானர் ???????
அவர் என்னை பார்த்து ''அம்மா ,இவள் உன் மகள் .உன் வீட்டில்தான் இருக்க வேண்டும் ''  என்றார்.
நாங்கள் சத்திரியர்கள். (வன்னியர்.)
அதிகம் அசைவம் சாப்பிடுவோம்.
எங்கள் வீட்டில் எப்படி ???????
வீடும் பெரிதல்ல .
ஆனால் அவர் உத்தரவு.
துர்க்கை மகள் வீட்டிற்கு வந்தாள் .6 மாதம்.
கார்த்தி ,  செந்தில் இருவரும்தான் தினசரி காலையும் மாலையும் விளக்கேற்றி   நிவேததனம்   (நெய்வேத்தியம் ) செய்தனர்.
6  மாதம் ....
இருவரும் 6 மாதமும் ஒரு function க்கும் செல்லவில்லை.6 மாதமும் ஊரை விட்டு வெளியே செல்லவில்லை.
6 மாதம் ஒரு முட்டை கூட வீட்டில் சமைக்கவில்லை.
கணவன் மனைவி உறவு எதுவும் இல்லை.அப்படி ஒரு புனிதமாக இருந்து கோவில் கட்டி முடித்து அற்புதமான கும்பாபிஷேகம் .
சுவாமிநாத குருக்கள் சொன்னார்.
''அம்மா, என் தந்தை 1000 கோவில் குடமுழுக்கு செய்ய ஆசைப் பட்டார்.ஆனால் முடியவில்லை.அந்த பொறுப்பை என்னிடம் தந்தார்.நான் செய்த குடமுழுக்கு களிலேயே இதுதான் இவ்வளவு சிறப்பாக நடந்தது.''
கார்த்தி, செந்திலிடம் சொன்னார்.
''டேய் ,இவள் உன் தங்கை .தங்கைக்கு கல்யாணம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் .சீர் வரிசை சிறப்பாக செய்ய வேண்டும் ''
3 நாட்கள் ஹோம குண்டம்.கண்ணை பறித்தது.
ஒரு அன்பர் போட்டோ எடுக்கலாம் என்கிறார்.
என் பதில் ''இல்லை வேண்டாம்.என்றாவது ஒரு நாளில் இந்த புகைப்படங்களை பார்த்து ஒரே ஒரு நொடி   நான்தான்  இந்த கோவிலை கட்டினேன் என்ற எண்ணமோ ,  கர்வமோ  வந்து விட கூடாது ''......
இன்று 21.06 ...இன்றுதான் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்த anniversary.
 மனம்  அழுகிறது.
கணவரையும் பறித்து,உயிரான கண்மகன் கார்த்தியையும் பறித்து ....இதுதான் என் பணிவிடைக்கு துர்க்கை கொடுத்த பரிசா ?
இன்றும் துர்க்கை ஜெகஜோதியாக இருக்கிறாள்.
தாயைத்தான் இருளில் தள்ளி விட்டாள் .
வாழ்க என் மகள்.
கார்த்திக் அம்மா

No comments: