Many may think that my post often carry a negative criticism. It may seem cynical or wired or what ever it is.
But my intention is that people have to analyse the way ,they behave and should try to change.
மக்கள் நிறைய திருந்த வேண்டும்.
நான் சொல்வதெல்லாம் சரியென்று சொல்லவில்லை. ஆனால் சரியாக இருந்தால் நல்லதே.
காலன் அடையா நோன்பு [ அ ] காரடையான் நோன்பு :
பாதி பேருக்கு ,அதுவும் இந்த நோன்பை நோற்கும் பலருக்கே அதன் உண்மையான பேர் தெரியாது. வழி வழியாக ஒரு புராணக் கதை. அது லாஜிக்கா இல்லையா , எந்த கேள்வியும் கிடையாது.
புராணத்தில் சாவித்திரி என்றொரு '' பத்தினிப் பெண் '' தன கணவனின் உயிரை எடுக்க வந்த எமனோடு பேசி கணவன் உயிரை மீட்டாள் என்பதால், அந்த நாளன்று எல்லோரும் அதே பூஜையை செய்தால், அப்பெண்களின் கணவர்கள் திர்க்காயுசாக இருப்பார்கள் என்பது ஐதிகம்.
கேள்வியே இங்குதான்.
1[சாவித்திரிக்கு பிறகு நாட்டில் வேறு பத்தினி பெண்களே பிறக்கவில்லையா ? காஷ்மீரில், இலங்கையில் , ஏன் நம் நாட்டிலும் எத்தனை பெண்கள் கணவனை பறிகொடுத்துள்ளனர். இந்த பூஜையை செய்த எத்தனையோ பேர் தங்கள் கணவனை இழந்து வாடுவது எனக்கு தெரியும்.அப்படியானால், சாவித்திரி கண்ணுக்கு மட்டும் எமதர்மன் தெரிந்தது எப்படி? பாக்கியராஜ் ஒரு படத்தில் கேட்பார். ''கற்புக்கரசிகள் பேரை கூறு '' என்று. எல்லோரும் ''கண்ணகி, சீதை '' என்று பதில் சொல்வர் .அப்போது அவர் கேட்பார் , ''ஏன் உங்கள் அம்மாவோ, மனைவியோ கற்புடன் இல்லையா, ஏன் அவர்கள் பேரைக் சொல்லவில்லை ? ' என்பார் .அது போலத்தான் இதுவும்.
அதுவும் , நோன்பிருக்கும் பெண்கள் அலட்டிக் கொள்வது இருக்கிறதே !!!
தாய்க் குலமே சற்று மாறு...
2] சாலை மறியல் :
அப்பாடா , தொட்டதற்கெல்லாம் சாலை மறியல். தண்ணீர் வரவில்லையா, ரேஷன் கடையல் சர்க்கரை தரவில்லையா, வீட்டு பாடம் செய்யவில்லைஎன்று ஆசிரியர் திட்டினாரா..... சாலை மறியல்.
அதனால் மற்றவர்கள் எவ்வளவு பாதிக்கப் படுகிறார்கள் என்பதை அவர்கள் நினைக்கிறார்களா?
நானே சென்னையிளுருந்து ஒரு ஊருக்கு போகிறேன். மாலை ஐந்தி மணிக்கு சென்று விடலாம் என்பது என் கணக்கு. ஆனால் நான் போய்க் சேரும்போது மணி பத்து. இருட்டு, தெரியாத ஊர், பசி,தாகம் .
அதுவாவது சரி. எத்தனை பேர் இன்டர்வியுவிற்கு செல்ல வேண்டும் , ,
ஒரு டாக்டர் ஆபரேஷனுக்கு நேரம் குறித்து விட்டு நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்க சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்புகிறார். வழி அடைபட்டு விட்டது . நோயாளியின் கதி?
அப்படித்தான் சாலை மறியல் செய்தாலும் என்ன நடக்கிறது? யாரோ இரு அதிகாரிகள் வந்து பேசுவர் . அவ்வளவுதான்.
பாதிக்கப் பட்டதென்னவோ மாட்டியவர்கள்தான்.
3]தனியார் பள்ளியும் ...கல்விக் கட்டணமும்:
யாரப்பா இவர்களை தடி கொண்டு அடித்து இந்த பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று சட்டம் போட்டது ? '' நாங்கள் மிடில் கிளாஸ் , எங்களால் எப்படி பணம் கட்ட முடியும் ? '' ஆஹா , ஏன் அரசு பள்ளிகள் இல்லையா ?
ஒரு பள்ளியை நடத்தி பார்த்தால்தான் தெரியும். முதலிடு , அதன் நிர்வாகம் எல்லாம். லாபம் இல்லாமல் நடத்த யாரும் புத்தர் கிடையாது. அவர்கள் ஒன்றும் அப்படி உறுதி மொழி கொடுக்கவுமில்லை. உன் தகுதிக்கேற்ற பள்ளியில் சேர்த்து விடு உன் குழந்தைகளை. படிக்கும் பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும். ஒரு பள்ளியில் படிக்கும் அனைவரும் கலெக்டர், டாக்டர் ஆகி விடுவதில்லை.உன் மகனுக்காக நீ பக்கத்தில் இருந்து கவனிக்கிறாயா? அதை செய்,. சாதாரண பள்ளியலும் உன் மகன் நிறைய மதிப்பெண்கள் பெறுவான்.
மக்களே திருந்துங்கள்.
கார்த்திக் + அம்மா