ஆடி மாதம் :
ஆடி மாதம் சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்ய ஆரம்பிக்கும் மாதம்.
மழை பெய்து புதுப் புனல் (நீர் ) வரும் மாதம்.
உழவர்கள், விவசாயிகள் நாற்று நடும் மாதம்.
மழை மாதம் என்பதாலும், விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதம் என்பதாலும்தான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப் பட்டன.அந்த காலத்தில் அரிசி முதல் அனைத்து பொருட்களும் உரலில் குத்தி ,வீட்டிலேயே தயாரிக்க வேண்டும். குறைந்தது 15 நாட்கள் அனைவரும் வேலை செய்ய வேண்டும். வேறு ஊர்களில் இருந்து வர வேண்டியவர்கள் மழையில் நடந்து அல்லது மாட்டு வண்டியில்தான் வர வேண்டும். இத்தனை சிரமங்களால்தான் இந்த மாதத்தில் திருமணம் வேண்டாம் என்று பெரியவர்கள் முடிவு செய்தார்கள்.
புது தண்ணீர் நோய்கள் கொண்டு வரும் என்பதால், வேப்பிலை மற்றும் மஞ்சள் தண்ணீர் (சிறந்த நோய் தடுக்கும் ஆற்றல் உள்ளவை ) ஊற்றுதல் என்ற பழக்கத்தையும் கொண்டு வந்தனர்.
இது அறிவியல் என்று சொன்னால் மக்கள் பின்பற்ற மாட்டார்கள். அதனால் மாரி அம்மன் என்ற தெய்வத்தை உருவாக்கினார்கள்.
நான் சிறு வயதாக இருக்கும்போது வயலில் வேலை செய்பவர்களுக்கு ஒரு பிளாஸ்டிக் பக்கெட் நிறைய சாதம், ஒரு தூக்கு நிறைய சாம்பார் என வீட்டிலிருந்து கொண்டு சென்று வேலை செய்யும் அனைவருக்கும் உணவளிப்போம்.சற்று படித்த குடும்பம் என்பதால் அரிசி சாதம்....
மற்ற வயல்களில் வேலை செய்வோருக்கு ராகி களி ( அதை கரைத்தால் கூழ் ) தான் தருவர். வேலை செய்வோர் வீட்டில் சமைக்க நேரம் + வசதி இல்லாததால் இந்த உணவை மகிழ்ச்சியுடன் உண்ணுவர்.
அந்த வழக்கம்தான் கூழ் ஊற்றும் சடங்காக மாறி விட்டது.எல்லாம் ஆடம்பரமான, அர்த்தத்தை புரிந்து கொள்ளாத சம்பிரதாயமாக மாறி விட்டது. இந்த மாரியம்மன், காளியம்மன் எல்லாம் lower gods என்று மேல்குடி ஒதுக்கி வைத்ததும் ஒரு காரணம்.
*******
நேற்று விஜய் டி .வி யில் சினிமா விருது நிகழ்ச்சியில் SRK யின் பேச்சு சிறப்பாக இருந்தது.அவருடைய ஆங்கிலம் மிக சரியாக இருக்கும்.நானும் ஒரு ஆங்கில ஆசிரியைதான்.நான் எந்த தவறுகளை எல்லாம் செய்ய கூடாது என்று என் மாணவர்களிடம் சொல்வேனோ அந்த தவறுகள் இல்லாமல் பேசுவார்.சாதரணமாக senior most என்றுதான் நிறைய பேர் சொல்வர்.ஆனால் most senior என்பதுதான் சரி.
அதே போல் postponed என்பதற்கு advanced என்பதுதான் சரியான எதிர்பதம் . நிறைய பேர் preponed என்ற வார்த்தையை பயன்படுத்துவர்.
எனக்கு தெரிந்த ஒரு ஆங்கில ஆசிரியை எப்போதும் அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாத onomatopoeic +high sounding வார்த்தைகளை பயன்படுத்துவார்.பார்ப்பவர்கள் என்ன ஒரு அருமையான ஆங்கிலம் என்று பாராட்டுவர். எனக்குதான் தெரியும்.எத்தனை தப்பான ஆங்கிலம் என்று.நான் ஒன்றும் பெரிய அப்பா டக்கர் இல்லை. ஆனால் எனக்கே எல்லாம் தெரியும் என்று வேஷம் போட மாட்டேன்.போகட்டும் என் கார்த்திக் மகனின் ஆங்கிலம் அவ்வளவு அருமையாக இருக்கும்.அவன் பேசும்போது கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.
எல்லாம் போய்விட்டது.வேதனை மட்டும்தான் மிஞ்சியுள்ளது.
கார்த்திக் அம்மா