பதிவிடுவது:
கார்த்திக் அம்மா
....... ......
மரண அடி
இப்போராட்டம்
தொடர்பாக தமிழ்ப்புலிகள் அமைப்பின் தமைமை நிலையச் செயலாளர் இளவேனில்,
"காதலர் தினக் கொண்டாட்டத்தை சங்பரிவார் அமைப்புகள் தவறு எனக்கூறுவதை நாம்
ஏற்றுக் கொள்கிறோம். பூங்காக்கள், கடற்கரைகளில் காதலர் தினம் என்ற பெயரில்
நடக்கும் அனாச்சாரங்களை நாமும் ஏற்றுக் கொள்ளவில்லை. முறைப்படி பெண்
கேட்கிறோம். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள் என்பது பாஜகவின் கொள்கை.
எனவே, எங்கள் இளைஞர்களுக்கு பெண் தாருங்கள் என முறைப்படி கேட்டு பாஜக
அலுவலகம் சென்றோம்" என்றார்.
கார்த்திக் அம்மா
....... ......
மரண அடி
புதுடெல்லி: டெல்லியில் திருமணம் செய்து வைக்கக்கோரி இளம் காதலர்கள் இந்து அமைப்புகளை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காதலர்களை
கண்டால் திருமணம் செய்துவைப்போம் என "ஹிந்து மஹாசபா" அறிவிப்பு
செய்திருந்ததை ஒட்டி காதலர் தினமான நேற்று ஏராளமான இளம் காதலர்கள் ஹிந்து
மஹாசபா அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு திருமணம் செய்து வைக்கும்படி
கூறியுள்ளனர்.
திகைத்துப்போன இந்துமகாசபா நிர்வாகிகள் காவல்துறையினரிட்ன் உதவியை நாடியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
*******
கோவை : கோவையில் காதலர் தினத்தன்று தலித் ஆண்களுக்கு பிராமணப் பெண்களை, பெண் கேட்டும் போராட்டம் பாஜக அலுவலகம் முன் நடைபெற்றது.
"இந்தியாவில்
உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே" எனக் கூறியுள்ள பாஜகவின் அறிக்கையை ஏற்று
தாழ்த்தப்பட்டுள்ள இந்து மணமகன்களுக்கு இந்து பெண்களை முறைப்படி மணமுடிக்க
கேட்டு, தமிழ்ப்புலிகள் அமைப்பின் செயலாளர் நாகை. திருவள்ளுவன் தலைமையில்
கோவை பாஜக அலுவலகம் முன்பு பெண் கேட்கும் போராட்டம் நடைபெற்றது.
தலித்களை
தொடர்ந்து இந்துக்கள் என வரலாற்று பொய்களை கூறி வரும் சங்பரிவார்
அமைப்புகள், தலித் ஆண்களுக்கு பிராமணப் பெண்களை மண முடித்து வைத்து
அனைவரும் இந்துக்கள் தான் என்பதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி
இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.
இப்போராட்டத்தில்
ஈடுபட்ட சுமார் 200 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, இரவு 7
மணிக்கு விடுதலை செய்யப்பட்டார்கள். தலைநகர் டில்லியில், காதலர்களுக்கு
திருமணம் செய்து வைப்போம் என இந்து அமைப்புகள் கூறியதைத் தொடர்ந்து,
திருமணம் செய்து வைக்க கேட்டு, காதலர்கள் இந்து அமைப்புகளை முற்றுகையிட்டது
குறிப்பிடத்தக்கது.
ஹ ,,ஹா .
நன்றே,
நன்றே.
கலா கார்த்திக்