அதிர்ச்சியாக இருக்கிறது.
.....//.....துபாய் மன்னரின் மூத்த மகன் ஷேக் ரஷீது பின் முகமது (33) சனிக்கிழமை காலமானார்.
மாரடைப்பு காரணமாக, அவர் உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரக செய்தி நிறுவனமான "வாம்' தெரிவித்தது.
இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் ஷேக் ரஷீது பின் முகமதை விடுத்து, இளைய மகன் ஷேக் ஹம்தானுக்கு தான் இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது.
உயிரிழந்த ஷேக் ரஷீது பின் முகமது, விளையாட்டு வீரராகவும், குதிரைப் பந்தய வீரராகவும் திகழ்ந்தார்.
அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, துபாயில் 3 நாள்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.....//....//
இந்த செய்தியை படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.
என்ன நடக்கிறது உலகில்?
கல்லையும் கரைக்கும் வயது என்பார்கள்.
33 வயதில் தலைவலி கூட வராது ..ஒரு காலத்தில்.
இப்போது தொலைகாட்சிகளில் உடல்நலம் பற்றிய நேரலை நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் பலர் 35 வயதுக்குள் இருக்கின்றனர்.
BP ,முதுகு வலி, இப்படி எத்தனை நோய்களை சொல்கின்றனர்.?
இவர்கள் 50 வயதில் என்ன செய்வார்கள்? கவலையாக இருக்கிறது.
என்னதான் மருத்துவம் வளர்ந்தாலும் ???
கவலையுடன்
கார்த்திக் அம்மா