About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/06/21

ஆசிரியர்


ஒரு ஆசிரியரை பனணி  மாற்றம் செய்ததும் அந்த மாணவர்கள் அழுத செய்தி படித்தவுடன்
மலரும் நினைவுகள் :
நான் பணி  புரிந்த பள்ளியில் +2 மாணவர்கள் மொத்தம் 400 பேர்.+1 ல் 400 பேர்
மொத்த ஆங்கில ஆசிரியர்கள் 4 பேர்.
ஒரு நாள் +2 மாணவர்கள் 400 பேரும் வகுப்பை விட்டு வெளியில் நின்று
''எங்களுக்கு இந்த ஆசிரியை தான் பாடம் நடத்த வேண்டும் '' என்ற கோரிக்கை.
எனக்கோ பெரிய தர்ம சங்கடம்.
மீதி 3 ஆங்கில ஆசிரியர்களும் என்னை விட சீனியர்கள் .
அவர்களுக்கு கோபம்.
ஆத்திரம்.
நேற்று வந்த இந்த ஜுனியருக்கு இவ்வளவு வரவேற்பா என்ற கொதிப்பு.
நானே மாணவர்களிடம் பேசி நிலைமையை சீராக்கினேன்.
இன்று அந்த நினைவு வந்து விட்டது....
*****

2018/06/15

என் நிலம்

என்னவோ ட்ரிபியூனல் னு சொன்னாங்க.
மேலாண்மை வாரியம்னு சொன்னாங்க.
ஒன்னும் புரியலையா.
சரி.
கிடக்குது  வுடு
தண்ணி இல்ல
விவசாயம் இல்ல.
அப்படின்னு நெனச்சுக்கிட்டு இருந்தா
திடீருனு கர்நாடகாவுல மழ கொட்டுகொட்டுனு  கொட்டிடுச்சா
இப்ப
35000 கன அடி தண்ணி வருது.
அணை நெறம்பிடும்.
மீதி தண்ணி கடலுக்கு போவும் .இந்த தண்ணிய சேமிக்க யாரும் எந்த திட்டமும் கொண்டு வர மாட்டாஹ .
எனக்கு காவிரி தண்ணிய நம்பி மேட்டூர்ல கொஞ்சமே கொஞ்சூண்டு நிலம்  இருக்குது.
(  சொல்லக் கூடாது.
எப்ப வேணுன்னாலும் பட்டா சிட்டா எல்லாம் காத்தில பறக்க 2 மணி நேரத்துல டெல்லிக்கு போக பறக்கும் ரோடு போட நெலத்த புடுங்காம இருந்தா )//
அடுத்த வெள்ளாமைக்கு (அதென்ன வோய் வெள்ளாமை ?? ஹி ஹீ ..அது வேளாண்மை ங்கிற வார்த்தைங்க .நாங்க சுத்த பச்சை ,,, வெள்ளை,,,தமிழனுங்கோ .அதனால தமில இப்படித்தானுங்க கொல பண்ணுவமுங்க )
அட விஷயத்துக்கு வாருமையா கார்த்திகேயா
அதானுங்க ( கார்த்திக் அம்மா வாகிய நான் )ரொம்ப யோசிச்சி தண்ணிய சேமிக்காலம்னு வீட்ல தேடுனா அண்டா இல்லிங்க.
குண்டாதான் இருக்குது.
சரி
குண்டான் ,டம்ளர் ,ஸ்பூன் எல்லாத்துலயும் தண்ணி புடிச்சு சேமிச்சு வச்சு அடுத்த வெள்ளாமை பண்ணப் போறனுங்க .
உங்க ஆசிர்வாதம் அவசியமுங்க.
அன்புடன்
கலா கார்த்திக் (எனும் )
கார்த்திக் அம்மா

எழுத்து பிழை

நிதி 
ஐயய்யோ
அநீதி 
அட மறுபடியும்
ஐயோ
ஐயையோ
நீதி
இந்த வார்த்தைக்கு தட்டச்சு செய்தால்
நிதி ....அநீதி .....இப்படி எல்லாம் என் கணினி அடங்கா பிடாரி தனம் செஞ்சா நான் என்னங்க பண்றது
குழப்பத்துடன்
கார்த்திக் அம்மா

2018/06/12

பள்ளிகள் மூடல்

தமிழ் நாட்டில் பல பள்ளிகள் மூடப் பட போவதாக சொல்கிறார்கள்.
மிக நல்ல விஷயம்.
ஒரு கணக்கு போட்டு பாருங்கள்.
10 மாணவர்கள் படிக்கும் பள்ளியில்
ஒரு தலைமை ஆசிரியர்
குறைந்தது 2 ஆசிரியர்கள்
ஒரு அலுவலக உதவியாளர்
ஒரு கிளார்க்
ஒரு இரவு காவலர்.
இவர்களுக்கான சம்பளம்.
+
மின் கட்டணம் +குடி நீர் +கழிப்பறைக்கான நீர்.
இதையெல்லாம் கணக்கிட்டால் ஒரு மாணவனுக்கான செலவு எவ்வளவு?

பின்தங்கிய மாணவர்கள்
ஏழை மாணவர்கள்
என்ற கூக்குரல் எழும்.
ஒரு குக்கிராமத்தில் கூட மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளது.
80 %  மாணவர்கள் அங்குதான் படிக்கிறார்கள்.
மீதி 20 % என்று கேட்க வேண்டாம்.
பக்கத்து பள்ளிகளுடன் இணைத்து விடலாம்.

மாணவன் அவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய வேண்டுமா?????
ஒரு தனியார் பள்ளிக்கு சராசரி
குறைந்த பட்சம் 20 பேருந்துகள் உள்ளன.
மாணவர்கள் தினசரி 20 கி.மீ வரை பயணம் செய்கின்றனர்.
அப்படியிருக்க அரசு பள்ளி மாணவர்களுக்கும் தனி பேருந்து இயக்கி ஒரே பள்ளியில் படிக்க வைக்கலாம்.
ஆசிரியர்களும் திறம் பட பாடம் நடத்துவார்கள்.
எப்போது பார்த்தாலும்
ஏழை மாணவன்
கிராமத்து மாணவன்
என்று சொல்லி சொல்லியே அவர்களை கேவலப் படுத்துவதோடு அவர்களுடைய திறமைகளையும் வளர விடாமல் செய்கிறார்கள்.
கார்த்திக் அம்மா

2018/06/03

2005 JUNE 3 Bangalore

JUNE 3 2005
இது ஒரு மீள்பதிவு .காலம் ஓடுகிறது. மனம் மட்டும் 2005 லியே இருக்கிறது.அப்போது எழுதியது..
// //1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)// //

இது இன்று 03/06/2018
தம்பி செந்திலின் படிப்பு முடியும் வரைதான் நீங்கள் சென்னையில் இருக்க வேண்டும்.
அப்புறம் என்னுடன் இருக்க பெங்களூரு வந்து விட வேண்டும் என்று கார்த்தி அன்பு கட்டளை இட்டதால் பணி  மாறுதலுக்கு விண்ணப்பித்து விட்டு (கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் long leave ) என்று சொல்லி விட்டு வேளச்சேரியில்  இருந்து வீட்டு சாமான்களை எடுத்துக் கொண்டு பெங்களூரு கிளம்பி விட்டேன்.
இனி வாழ்நாள் முழுக்க பெங்களூருதான் என்பது திட்டம்.
எனக்கு பெங்களூரு பிடித்த நகரம் அல்ல 
சென்னை பிடிக்காத ஊரும் அல்ல .
மகன் இருக்கும் இடம் என் சொர்க்கபுரி. 
அவனுடன் சேர்ந்து வாழ்வது தலையாய இன்பம்.
அவ்வளவுதான்.
நான்+கார்த்தி+செந்தில் ...போதும்.
வேறு என்ன வேண்டும் ஒரு தாய்க்கு .
விதி இவ்வளவு கோரமாக விளையாடும் என்று தெரியவில்லை.
 போன வேகத்தில் திரும்ப வந்து விட்டேன்.ஆசையுடன் அழைத்துச் சென்ற மகனை விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் பறி  கொடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து நடைப் பிணமாக இருந்து கொண்டிருக்கிறேன்.
இப்படி ஒரு வேதனை தேவையா? மனம் கதறிக் கொண்டே இருக்கிறது.
அம்மா

2018/06/01

வருணுக்கு பதில்

அன்பு வருண்
first let me make it clear that i do not belong to any party.
i am not a die hard fan of anybody   nor do i hate anybody.
and I AM AM NOT AN UPPER CLASS ******
வருண் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.என்னுடைய முந்தைய பதிவிற்கு நீங்கள் கொடுத்த பின்னூட்டத்திற்கு 3 வார்த்தைகளில் ஒரு பின்னூட்டமாக முடித்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் யோசனை நீண்டு செல்ல
இது ஒரு தனி பதிவாக ஆகி விட்டது. யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல
அல்லவே அல்ல.
வருண்
நீங்கள் குறிப்பிட்ட அந்த வீடியோவை முன்னாலேயே பார்த்து விட்டேன்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
கலெக்டர் அலுவலகத்தில் cctv வேலை செய்யவில்லை என்கிறார்கள்.
நானே டி வியில் தெளிவாக பார்த்தேன்.cctv வியின் wire அந்த கம்பத்தில் சுற்ற பட்டு நம் வீட்டில் இருக்கும் அலங்கார விளக்குகள் தொங்குமே அப்படி தொங்கிக் கொண்டிருந்தன.
அப்படி செய்ய ஒரு ஏணி அல்லது ஒரு ஸ்டூல் தேவைப் படும்.
ஒரு 20 நிமிடமாவது வேண்டும்.
அப்படி செய்யும் வரை போலீசோ அல்லது கலெக்டர் ஆபிஸ் ஊழியர்களோ கவனிக்கவே இல்லையா?
சரி.
இந்த வீடியோ எடுக்க முடியும் போது ஏன் மீதி காட்சிகள் படமாக்க படவில்லை?
சரி.
இந்த காட்சிகளில் கல்லெறியும் அந்த தீவிரவாதிகள் ( ?? ) முகம் தெளிவாக தெரிகின்றது.
அவர்களில் ஒருவர் கூட ஏன் இது வரை கைது செய்யப் படவில்லை.
அவர்கள் கல்லெரியும் விதமே சொல்லவில்லையா அவர்கள் கூலி படை என்று.
அவர்களை யார் அனுப்பியிருந்தாலும் போலீஸ் அவர்களை துரத்தினார்களே
ஒருவரை  கூட பிடிக்க முடியவில்லையா?
my doubt is that the entire video is doctored
வருண்
என் முந்தைய பதிப்பான ''பஸ் எரிப்பு '' படியுங்கள்.
அந்த 4 இளைஞர்களையும் தண்டிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.அது போல் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும்.
ஆனால் சுட கூடாது.
தூக்கு தண்டனையே வேண்டாம் என்று போராடும் இந்த காலத்தில் இப்படி அப்பாவி மக்களை சுட வேண்டுமா?
அப்பாவி மக்களும்தான் பலியாவார்கள் என்ற உங்கள் வாதம் சரியென்றாலும்,
பலியானவர்கள் அனைவரும் அப்பாவிகள் மட்டும்தான்.
17 வயது பெண் அதிகமாக கத்தினாள் என்ற ஒரே தவற்றுக்காக வாயில் சுடுவது எந்த தர்மம்.
யார் யார் எல்லாம் முன்னாள் நின்று குரல் எழுப்பினார்களோ அவர்கள் எல்லாம் சுடப் பட்டனர்.
மகள் கேட்டாள் என்று மீன் வாங்கிக் கொண்டு வந்த அம்மா வீட்டு வாசலில் சுடப் படுவது எதனால்?
ஒரு ஆன்மிகப் பெரியவர் என்ற அளவில் பார்க்கப் படும் ஒருவர் சுடுகாடாகி விடும் என்று சாபமிட்டதுதான் எனக்கு அதிர்ச்சியை தந்தது.
என் கணவர் சொல்வார் "உன் வாயால் யாரையும் திட்டாதே , சாபமிடாதே ''
என் பதிவை தொடர்ந்து படித்தால் தெரியும்.
அதில் கோபமான ,கடுமையான ,தவறான வார்த்தைகள் வரவே வராது.
2005 ஆகஸ்ட் 23ம் தேதி கார்த்தி செந்திலுடன் பெங்களூரில் கார்த்தி வீட்டில் இருக்கிறோம்.என்னவோ மன உளைச்சலில் " " எழவெடுக்க " " என்று கத்தினேன்.எனக்கு இந்த வார்த்தையெல்லாம் வரவே வராது.
3 நாட்கள்தான்.
மூன்றே நாட்கள்தான்.
கார்த்திக்கிற்கு விபத்து.அவன் உலகை விட்டு போய் விட்டான்.
சாதாரணத்திலும் சாதாரணமான என் வார்த்தைகளே பலிக்கும் என்றால் ஒரு ஆன்மிக பெரியவர் வார்த்தை ????

ஒரு உயிரை இழப்பது எத்தனை வலி தெரியுமா வருண்???
கார்த்திக் அம்மா என்ற வார்த்தைக்கு பின் எத்தனை வலி மறைந்திருக்கிறது.?
கார்த்தி இருந்திருந்தால் நான் கலாவதியாக மட்டுமே இருந்திருப்பேன்.
கார்த்திக் அம்மாவாக உங்கள் எல்லோருக்கும் அறிமுகம் ஆகி இருக்க மாட்டேன்.கார்த்தியின் வலை தளத்தை நான் தொடர்ந்ததால் (தொடர நேரிட்டதால் ) கார்த்தி இருந்திருந்தால் நான் ஏன் வலை பக்கம் வருகிறேன்?
பேரன் பேத்தி என்று வேறு ஒரு உலகில் சந்தோஷமாக இருந்திருப்பேன்.
எத்தனை சந்தோஷங்களை இழந்துள்ளேன்.அந்த ஆன்மிக பெரியவரின் கோபமான வார்த்தைகளால் ஏதாவது அசம்பாவிதம் நடந்து உயிர் பலிகள் ஏற்பட்டு விடுமோ என்ற திகில்தான் எனக்கு.
யாரும் தன உயிராக நினைப்பவர்களை இழக்கக் கூடாது வருண்.
அது மட்டுமே என் பதிவின் நோக்கம்.யாரையும் குறை சொல்லவில்லை.யாரையும் நியாய படுத்தவும் இல்லை.
அன்புடன்
தாங்க முடியா மன வலியுடன்
கார்த்திக் அம்மா