வட சென்னை :
2004 ல் தேர்தல் பணிக்கு வட சென்னைக்குதான் சென்றேன். ஐயோ
அங்கேயா என்கிறார்கள்.
சவால் என்பது எனக்கு வாடிக்கையான ஒன்று.
எப்படியாவது என்ன எதிலாவது மாட்டி வைக்க வேண்டும் என்பது பலரது வெறியாக இருந்தது.
போனேன்.தேர்தல் அதிகாரி..
ஓட்டுகள் பதிவாகிக் கொண்டிருந்தன.
கள்ள வோட்டுக்கு அனுமதி இல்லை என்று கடசியினரிடம் உறுதியாக சொல்லி விட்டேன்.
நடபாக நல்ல விதமாக கேட்டார்கள்.
மீண்டும் மறுத்து விட்டேன்.
தேர்தல் பணி செய்பவர்களுக்கு காபி ,பிரியாணி கொடுப்பார்கள்.எங்களுக்கு வரவில்லை.என்னுடன் பணி செய்தவர்களுக்கு நானே வாங்கிக் கொடுத்தேன்.
2 மணி அளவில் ஒரு 20 பேர் வந்தார்கள்.
யார் தொகுதி தெரியுமா என்றார்கள் ????
எல்லோரையும் தெரியும் என்றேன்.
சென்று விட்டார்கள்.
DSP வந்தார்.sir பணி முடிந்து செல்லும் போ து எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றேன்.மிகவும் மகிழ்ந்தார் அவர். கள்ள வோட்டு விழாத ஒரே பூத் என பாராட்டி சென்றார்.
...
எதற்கு பழைய கதை என்கிறீர்களா ???????
2 நாட்கள் அந்த ஏரியாவில்தான் இருந்தேன்.
சாம்பிளுக்கு கூட எந்த கெட்ட வார்த்தையும் காதில் விழவில்லை.
கட்சியினரும் என்னிடம் நல்ல விதமாகவே பேசினர்.
சிறிய மிரட்டல். மற்ற படி எந்த தவறோ ,அத்து மீறலோ இல்லை.என்னை வட சென்னை ,ரௌடி ஏரியா என்று ஏன் பயமுறுத்தினார்கள் என்றே தோன்றியது.
அப்படி நான் பார்த்த வட சென்னையை மிகவும் கெட்ட வார்த்தைகளே பேசிக் கொண்டு கத்தி அரிவாளுடன் அலையும் கூட்டமாக ஏன் திரைப் படம் எடுத்தார்கள்.
ஒரு வட சென்னை வாலிபன் பெங்களூரில் MNC யில் வேலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
அவனுக்கு இனிமேல் கம்பெனியில் என்ன மதிப்பு இருக்கும்?
அங்கே படித்தவர்களே இல்லையா?
அதே வட சென்னையில்தான் ஆசிரியர் கருத்தரங்கம் நடந்தது.அப்போதும் எந்த தவறான வார்த்தைகளையோ நிகழ்வுகளையோ நான் பார்க்கவில்லை.
என் நண்பிகள் இருவர் அங்குதான் வேலை செய்தனர்.
கஷ்டம் என்று ஒரு நாளும் சொன்னதில்லை.சந்தோஷமாகத்தான் வேலை செய்தனர்.
ஒரு பேச்சுக்கு அங்கு அப்படியான வார்த்தைகள்தான் பயன் படுத்துகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
அதை இப்போது வெளிச்சம் போட்டு எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டிய அவசியம் என்ன?
பீப் பாடல் வந்த போது அந்த வார்த்தை எனக்கு பதிந்து போனது.மிக மிக பயமாக இருந்தது.என்றாவது என்னை அறியாமல் இந்த வார்த்தையை சொல்லி விடுவேனோ என்று திகில் அடித்தது.
இப்போது அது போல் 100 வார்த்தைகள் என்கிறார் திரு.ராஜன்.
சமுதாயத்தை நல்வழிப் படுத்த வில்லை என்றாலும் கெடுக்காதீர்கள்.
இன்று குங்கும பூவும் கொஞ்சு புறாவும் என்ற படம் பார்த்தேன்.எதற்கு?
இப்படிப் பட்ட படங்களை எடுத்து இளைஞர்களை கெடுக்காதீர்கள்.
கார்த்திக் அம்மா