About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/04/21

 இது புது பதிவு அல்ல .ஏப்ரல் 2020 யில் எழுதியது .மறுபடியும் இதை பற்றியே எழுதுவேன் என்று நினைக்கவே இல்லை ,//

 மஹாராஷ்டிராவில படித்துக் கொண்டிருந்த ஒரு 22 வயது மாணவன் அங்கிருந்து நடந்தே வந்திருக்கிறான் .350 கிலோ மீட்டர் ...
சாத்தியமா ?
ஏன் நடக்க வேண்டும் ?
அந்தந்த மாநில முதல்வர்கள் சொல்லி இருக்கலாம் .எல்லோரும் அவரவர் இடத்திலேயே இருங்கள்.
உங்களுக்கு நாங்கள் எல்லா உதவிகளையும்  செய்கிறோம்.
உணவும்  இருக்கும் இடமும் இருந்தால் போதும் .
உணவு கொடுக்க வேண்டியது அரசு.
இதை உடனடியாக செய்து இருந்தால் இத்தனை பேர் புலம் ,இடம் விட்டு இடம் போயிருக்க மாட்டார்கள்.
காசு கொடுங்க என்று மட்டும்தான் கேட்க வேண்டுமா .
மக்களும் கொஞ்சம் அறிவு பூர்வமாக செயல் பட வேண்டும்.
உணர்வு பூர்வமாகவே நடப்பதே நம் பழக்கம்.
..... 9 மணிக்கு செய்தி ....emergency declare ....என்ற பயத்தில் பலர் உறைந்து போயிருக்க ....

no comments ....

இப்போது மறுபடியும் அதே கதை.

எல்லோரும் சொந்த ஊர் திரும்புகிறார்கள் .மீண்டும் நடை.

தன் உரையில் கொரோனாவை ஜெயிப்போம் என்றுதான் சூளுரைக்கிறார் தலைவர்.

இப்போதும் உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என்ற உத்தரவாதம் இல்லை.

நிறுவனங்கள் தன்னை நம்பி வந்த தொழிலாளர்களை காப்பாற்ற மனமில்லாமல்   கையை விரிக்க ....மீண்டும் ஊர்  நோக்கி நடக்கிறார்கள் .

குறைந்த பட்சம் அவர்களுக்கு ஒரு ரயில் ஏற்பாடு செய்யலாம் .

என் மாணவன் ஒருவன் போன லாக் டௌனிலேயே அத்தனை தொழிலாளர்களையும் கம்பெனியிலேயே வைத்து  சோறு போட்டு நல்லது செய்திருக்கிறான்.

அவன் சொன்னான்.''உங்களிடம் படித்த நாங்கள் எப்படி இருப்போம் ...என்றாலும் இதில் ஒரு சுயநலமும் இருக்கிறது.சகஜ நிலை திரும்பும் போது இவர்கள் திரும்பி வராமல் போனால் புதியவர்களை வேலைக்கு எடுத்து பயிற்சி கொடுத்து ....என்ற பிரசினைகள் ...''

என்று சொன்ன போது  மனம் நிறைந்தது.

ஒரு நண்பியிடம் போன வருடம் பேசிய போது சொன்னாள் .''இவர்கள் எல்லாம் சாகட்டும் .இவர்களுக்கு சோறு போடுவதற்கு அரசிடம் காசு இல்லை.''

அரசின் ஒரு ஆண்டு வருமானம் என்ன .இது போன்ற பேரிடற்கு ஒதுக்கப் படும் தொகை பற்றி எல்லாம் அவளிடம் பேசவில்லை .செத்து ஒழி என்பவளிடம் என்ன பேச முடியும்?

அதுவும் இந்த பி * பி ஆட்களிடம் பேசவே முடியாது.

ITS FOOLISH TO ARGUE WITH FOOLS என்று சொல்வார்கள்.
 

2021/04/07

தேர்தல் அலப்பறைகள்

 எல்லோரும் ஜனநாயக கடமை ஆற்றி யாகி விட்டிர்களா .

நான் காஃபி மட்டும்தான் ஆற்றினேன்.

 வோட் போட்டிர்களா என்று சொல்லலாம்.என்ன ஜனநாயக கடமை?

வர வர கடு கடு தமிழ் .சனாதன தர்மம்..என்பது போல் பல தமிழ் சொற்கள்..ஆக தமிழ் நாட்டில் தமிழும் தெரியவில்லை.ஆங்கிலமும் தெரியவில்லை .இதுல இந்தி படி என்ற காமெடி வேறு.

ஒரு புலி இதோ பாரு நான் வர்றேன் பாரு என்று கேட்டை திறந்த நேரத்தில் இருந்து கேமரா பக்காவா செட் செய்து வந்து சீறி விட்டு மேலே இருந்து வந்த காற்றில்  அசைந்த இலையை பார்த்தவுடன் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து அங்க பிரதட்சணம் செய்து அப்படி எல்லாம்  இல்லங்கன்னா என்று வாலை  சுருட்டி கக்கத்தில் வச்சுட்டு போய் ஒளிஞ்சுக்கிச்சு .

அட நாட்ல நடிகர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா .இவர் வந்தார்.அவர் வந்தார்.என்று நாள் முழுக்க அந்த முகங்களையே பார்க்க வைத்தார்கள்.

யாரோ '' வேசி ஊடகங்கள் '' என்று சொன்னது நினைவிற்கு வந்து போனது.

....கொரோனா காலத்தில்  குழந்தைகளை வெளியே கொண்டு வராதீர்கள் என்று உலகமே அலறிக்  கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பாச மிகு தாத்தா தன் பேரனுடன் வந்து ''ஜனநாயக கடமை ''ஆற்றி '' விட்டு சென்றார்.

இவன்தான் பணம் கொடுத்தான் என்று A சொல்ல இல்லை இல்லை இவன்தான் கொடுத்தான் B சொல்லி உத்தமர்கள் ஆகிக் கொண்டிருந்தார்கள்.

அம்மியில் அரைத்து,டான்ஸ் ஆடி,  ''பூ வைத்து விட்டு ''  துணி துவைத்து ETC  நாடகங்களை நடத்தி மக்களை  வாழ வைக்கவே இதையெல்லாம்  செய்கிறோம் என்று டன் டன்னாக பூ சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஆஹா இந்த தொகுதியில் குப்பை கூட அள்ளவில்லை .10 வருடமாக இந்த தொகுதி M .L .A என்ன செய்தார் என்று  எம் .எல்.ஏ  வை பக்கத்தில் வைத்துக் கொண்டே முழங்கினார் ஒரு அம்மணி.

இன்னொரு தேவதை ஜி எல்லா பேய்களுக்கும் சேவை செய்திருக்கிறார் என்று மக்களை எல்லாம் பேய்களாக்கி விட்டு சென்றார்.

ஒரு வழியாக எல்லா DRAMAA வும் முடிந்து விட்டது.

 காமெடி போதும்.''வேதனையான விஷயம் ''

கழுதை மேல் EVM  எல்லாம் ஏற்றி கொண்டு போகும் காட்சியை பார்த்த போது மனம் மிக மிக வேதனை பட்டது .

சுதந்திரம் வாங்கி 73 வருடங்கள் ஆகி விட்டது.இன்னும் அந்த மக்களுக்கு ஒரு சாலை வசதி கூட செய்து தரவில்லை என்பது எவ்வளவு அவலமான அவமானமான விஷயம்.

8 வழி சாலை, 8000 கோடி விமானம் , 3000 கோடி சிலை .....

2024ல் எல்லோருக்கும் rest room என்று சொல்லும் போது ஒரே ஒரு நொடி மனம் இடித்துரைக்காதா .

போதும் புலம்பல்.

BYE

 https://youtu.be/lGbx3May-DQ