சில பல செய்தி சேனல்கள் தரும் செய்திகள்.
ஒரு 1/2 மணி நேர நிகழ்ச்சி :
ஆரம்பம்.
முதல் 5 நிமிடங்கள் பெண்களின் உள்ளாடை விளம்பரங்கள் .(மகனோ ,மகளோ அல்லது வேறு யாராக இருந்தாலும் ,பக்கத்தில் இருந்தால் அவ்வளவுதான்.)
அதற்கடுத்தது ஒரு சாக்லேட் விளம்பரம்,அப்படி ஒரு மொக்கையாக இருக்கும்.
இப்படியாகத்தான் விளம்பரங்கள் முடிந்த பிறகு
முதல் செய்தியாக 2 மகன்களுக்கு தாயான 40 வயது பெண் 20 வயது கள்ள காதலனுடன் ஓட்டம்.
2வது செய்தியாக 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிர்இழப்பு.
3 வது செய்தியாக பின்னால் வந்த லாரி பேருந்து மீது மோதி 6 பேர் " "பரிதாபமாக உயிர் இழந்தனர் " ".
உயிர் இழப்பதே பரிதாபமானதுதான்.அதில் இந்த அடைமொழி வேறு.
4வது செய்தி.70 வயது முதியவர் பெண்ணின் வயிற்றில் இருக்கும் 6 மாத குழந்தைக்கு பாலியல் தொந்திரவு.
''சிறிய இடைவேளைக்கு பிறகு செய்திகள் தொடரும்.''
இடைவேளையில் மீண்டும் சட்டி,பனியன்,மிளகாய்த் தூள் விளம்பரங்கள்.
5 வது செய்தி :ஒரு தலைவர் ஒரு நிகழ்சசியை தொடங்கி வைத்து உரை ''ஆற்றுவார் "(சூடாக இருக்கிறதாம்.) அதனால் ஆற்றுகிறார்.
நமக்குத்தான் சுகர் ,பி .பி எகிறி உடல் சூடாகிவிடும்.
6வது செய்தி. நாளை மழை வரும் என்று நாங்கள் சொல்வதால் அதை நம்பி குடையோ ,ரெய்ன் கொட்டோ எடுத்து செல்ல வேண்டாம்.
7 வது செய்தி :இத்துடன் இந்த செய்தி அறிக்கை முடிவடைந்தது.
ஒரு செய்திக்கும் அடுத்த செய்திக்கும்இடையில் பாகிஸ்தானிலிருந்து நாலைந்து பாம் போட்டது போல் வெடி சத்தம்.
அது ஒன்றும் இல்லைங்க.BGM .
முன்பெல்லாம் செய்திகளுக்கு இடையேதான் வெடிகுண்டு.
இப்போதெல்லாம் செய்திகள் வாசிக்கும்போதே குண்டுமழைதான்.
இந்த சேனல்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் எந்த மாற்றமும் கிடையாது.
தலைவிதியே ..தலைவிதியே ..என்று விதியை திட்டிக் கொண்டே பார்க்க வேண்டியதுதான்