காலம் ஓடுகிறது.மாற்றம் ஏதுமின்றி.
கார்த்தியின் இழப்பு தாங்க முடியாத துயரமாக இருக்கிறது.
வாழ்வில் சந்தோஷமான நிகழ்வுகளே இல்லை.ஜூன் 2005 ல் பெங்களூரு சென்றேன்.
இனி இங்குதான் வாழ்நாள் முழுக்க.
இல்லையென்றால் டெக்சாஸ் என்று.
உலகின் எந்த ஊராக இருந்தால் என்ன ?
கார்த்தியின் கை பிடித்து நடந்தால் போதும்.
சென்னையில் இருந்து கிளம்பியாயிற்று.
transfer கிடைக்கவில்லை. வேலையை பற்றி கவலை இல்லை.
கார்த்தி நான் அவனுடன் இருக்க வேண்டும் என்று ஆசை பட்டான்.
அப்புறம் என்ன?
வேலையாவது.சம்பளமாவது .DON'T CARE .
ஆனாலும் மனம் சற்று கலங்கித்தான் இருந்தது.
புது ஊர். புது மொழி .புது மக்கள்.செந்திலின் மேற்படிப்பு.
எல்லாம் பயமுறுத்தியது.
ஆனால்
கார்த்தி ..
அவனுடன் சேர்ந்து இருக்க போகிறோம் என்ற ஒரே நினைவு.
கொடுமையே ......3 மாதம்தானடி ....பாவியே ...என்று விதி கை கொட்டி சிரித்து கொண்டிருந்தது காதில் கேட்கவில்லை.
சுனாமியாய் வந்தது .கார்த்தியின் பைக் விபத்து.
தாயை இழந்த குழந்தையாய் மீண்டும் சென்னை.
வாட்டுவது வெய்யில் மட்டும்தானா ????
கண்ணில் நிற்காத கண்ணீர் .
ஒரே ஒரு முறை கார்த்தியை பார்த்து விட மாட்டோமா என்ற தவிப்பு.