மாமன்னன் மேலும் சில பழைய நினைவுகளை கிளறி விட்டது.
எனக்கு ஒரு பெரியம்மா இருந்தார்கள். ரவி வர்மா ஓவியம் போல் அவ்வளவு அழகு.வீட்டிற்கு வருவார்கள். அம்மாவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அப்பாவின் வண்டி வரும் சத்தம் கேட்டால் போதும். போய் கதவிற்கு பின்னால் நின்று கொள்வார்கள்.அப்பா கேட்பார்.
''என்னங்க நல்லா இருக்கீங்களா? ''
ஹும் என்று ஒரு 0 டெசிபலில் பதில் வரும்.
அட கதவிற்கு பின்னால்தானே நிற்கிறார். உட்காரலாம் அல்லவா . நின்று கொண்டேதான் இருப்பார்.என் அப்பா ஆங்கிலேயரிடம் படித்ததால் மிகவும் முற்போக்கு வாதி. என்ன சொன்னாலும் சரி.நின்று கொண்டே இருப்பார் அந்த பெரியம்மா.
இது 1960,70 களில் .
அடுத்த கதை.இது 1987.
ஒரு வீட்டிற்கு சென்று இருந்தோம்.அந்த வீட்டு மருமகள் ஒரு டாக்டர்.கான்வென்டில் படித்தவர்.
ஆனால் என் பெரியம்மா போல் இந்த பெண்ணும் கதவின் பின்னால் !!!!!!!!!!!!!!!.
எனக்கு மயக்கமே வரும் போல் இருந்தது.
இந்த காலத்தில் இப்படியா?
இப்படி படித்த குடும்பத்தில் இப்படி ஒரு பழக்கமா?
இது அடிமைத்தனமா??????????
அது அப்படி அல்ல.
காலங் காலமாக வரும் பழக்கம்.
அவ்வளவுதான்.
அதே போல்தான் என் மாமனார் வீட்டிலும்.யாருமே என் மாமனார் எதிரில் யாருமே நிற்க மாட்டார்கள்.தேவர்மகன் போல் 4 மகன்களும் பின்னால்தான் நிற்பார்கள்.
நான் அதெல்லாம் தெரியாமல் மாமனார் முன்னாள் உட்கார்ந்து கொண்டு ஒரே அலப்பறை.எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம் .இது என்னடா இது இந்த பெண்????????எல்லா ஆண்களிடத்திலும் சகஜமாக பேசுது?
கிராமத்து பெண்கள் ''இது என்னடா .இந்த பெண் கொழுந்தனை பேர் சொல்லி கூப்பிடுது.''என்று என்னை சுற்றி நின்று கேள்விகள்.
இதெல்லாம் அடிமைத்தனம் என்று யாருமே நினைக்கவில்ல .
அப்படி இருக்க மாமன்னனின் அடிமைத் தனம் பற்றி பேச என்ன இருக்கிறது.