About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2004/06/29

விஜயநகரம் Travelogue

நாம ஒரு travelogue எழுதினா என்ன? நமக்குன்னு ஒரு blog வேற இருக்கு. அதையும் ரெண்டு மூணு பேர் படிக்கறாங்க! சரி எழுதிடுவோம்!

வாழ்க்கையிலேயே நான் போன ஒரே உருப்படியான travel ஹம்பி போனது தான். அதைப்பத்தி எழுதுவோம்.

நான் ஹம்பி(விஜயநகரம்) முதலில் போனது ஜனவரி 2003-இல். ஆ·பீஸ் நண்பர்களுடன் சென்று அரக்க பறக்க ரெண்டு நாள் ஹம்பியை whirlwind டூர் அடிச்சதில் ஒரு திருப்தியே இல்லை. இன்னொரு தடவ போய் பொறுமையா பாத்தாகணும்னு தொனிச்சு. இந்த தடவ மாட்டினவன் பாலா. (இந்த blog-அ படிக்கிற ரெண்டு ஜீவன்கள்ல ஒண்ணு). ஒரு வாரம் சுத்தனும்னு ப்ளேன் பண்ண ஆரம்பிச்சு, கடைசியா மூணு நாள் சுத்தரதுன்னு முடிவு பண்ணி ஒரு வழியா ஹோஸ்பேட் போய் சேர்ந்தோம்.

ஹோஸ்பேட் பஸ்-ஸ்டாண்ட்-ல ஒரு பஸ்ல இருந்தவங்க கிட்ட திக்கி திணறி 'ஹம்பி போகுமான்னு' கன்னடால கேட்டு ஏறி உக்காந்தா, அந்த ஆளு cool-ஆ 'தினமனி' பேப்பர விரிச்சு படிக்க ஆரம்பிச்சான். பக்கத்துல இருந்தவன் 'குடும்ப மலர்' எடுத்து படிக்க ஆரம்பிச்சான். 'அடப்ப்பாவிகளா¡¡¡!, இங்கயுமா?'

ஒரு வழியா ஹம்பி-ல KSTDC ஹோட்டலுக்கு போய் ரெடி ஆயிட்டு, நாங்க பாக்க கிளம்பின முதல் இடம், ASI மியூசியம். அங்கு ஆராய்ந்த சில exhibit-கள்:

* ஐந்து லிங்கங்கள் உள்ள லிங்கம். (குழப்புகிறேனா? இதை வேற எப்படி சொல்றது?)


* நந்தி fountain?!?


* சாப்பாட்டு கல், இதை எப்படி கழுவுவார்கள்?


* ஒரு சாமியார். நம்ம ஊரான்னு சரியா தெரியலை. பாக்க எதோ அராபியர் மாதிரி இருக்கார்.


* பல வீரக்கற்கள்/சதி கற்கள். இவற்றில் ஓரளவு பொதுவான விஷயங்கள் : சந்திரன், சூரியன், சிவலிங்கம் அல்லது வைணவ நாமம், போரில் மாண்ட வீரர்களின் வீர சாகசங்கள், அவருடன் உயிர் மாய்த்துக்கொண்ட பெண்கள். பல சிலைகளில் கழுத்துக்கு இரு புரமும் குழிகள் இருக்கின்றன. பூமாலைகள் மாட்டுவதற்கோ?


To be continued...



[+/-] Expand/Collapse

2004/06/19

கோழி சாலையை கடந்தது ஏன்? - III

Jurassic Park Trilogy, Terminator Trilogy போல 'கோழி சாலையை கடந்தது ஏன்?' மூன்றாம் பாகமும் புதிய இயக்குனரால் இயக்கப்படுகிறது. (ஒரிஜினல் இயக்குனரின் அனுமதி இல்லாமல் ;)(http://sodabottle.blogspot.com) இதற்காக பல மாதங்களாக கிடப்பில் கிடந்த blog-ஐ தூசி தட்டி எடுத்திருக்கிறேன்.

சாண்டில்யன்:
அத்தியாயம் 53
விஜயநகரத்து கோழி

பல்வேறு ஊர்களில் பல முட்டைகள் போட்டதும், யாரும் கடக்காத சாலைகள் பலவற்றை சுலபமாக கடந்ததனால் 'சாலை கடந்தான்'* என்ற சிறப்பு பெயர் பெற்றதும், காந்தளூர் சாலையை கடக்கும் போது உயிர் துறந்ததனால் 'காந்தளூர் சாலை துஞ்சிய கோழி' என பின்னாளில் வரலாற்றில் பிரசித்தி பெற்றதும், 'முர்கி' என வட நாட்டவர்களால் அழைக்கப்பட்டதுமான விஜயநகரத்து கோழியை இளையகுமாரன் அந்த சாலையில் அந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அதனால் சற்றே கலக்கமுற்றான் என்றாலும் 'உதயகிரி கோழி பண்ணையில் இருக்க வேண்டிய கோழி இங்கு ஏன் வந்தது?' என சிந்தனையில் ஆழ்ந்தான். கோழியை பற்றி இளைய குமாரன் தீவிர சிந்தனையில் இருந்தாலும், கோழியை பார்த்த அதிர்ச்சியில் 'ஆஆஆ' என அலறி அவன் மேல் சாய்ந்துவிட்ட மயில்விழி, இன்னமும் மூர்ச்சை தெளியாமல் அவன் மேல் விழுந்து கிடந்ததாலும், அவள் அங்க லாவண்யங்கள் அவன் மேல் பலவாராக மோதியதாலும் பல இன்ப துன்ப வேதனைகளுக்கு உள்ளானான். மயில்விழியின் தோள்களை பற்றி தூக்கிவிட்டு அவள் மூர்ச்சையை தெளிவிக்கலாமா என்று எண்ணினாலும், மயக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணை தொட்டு தூக்குவது தவறு என்று வழிவழியாக வந்த அவன் தமிழ் பண்பாடு உணர்த்தியதால், ஒன்றும் செய்யாமல் அவளுக்கு அடியிலேயே படுத்து கிடந்தான். இதனை தூரத்தில் இருந்து விஜய நகரத்து கோழி பார்த்து கொண்டிருக்கிறது என்பதையும் கவனித்த இளையகுமாரன், அதனை குறுவாளெறிந்து கொன்று விடலாமா என யோசித்தான்.

இதற்குள்ளாக விஜய நகரத்து கோழி மெதுவாக சாலையை கடக்க ஆரம்பித்தது.
(தொடரும்...)
---------------------------------------------------------
* - பண்ணைபுரம் கோழி பண்ணை கல்வெட்டு
(வரலாற்று குறிப்பு : 2003-ம் ஆண்டு கோழி சாலையை கடக்கும் போது லாரியில் அடிபட்டு இறந்தது - The Hindu dt. 11.12.2003)

(என் குறிப்பு : விஜய நகரத்து கோழிக்கும், இளைய குமாரன்-மயில் விழிக்கும் எந்த சம்மந்தமும் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.)



[+/-] Expand/Collapse