About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2004/06/19

கோழி சாலையை கடந்தது ஏன்? - III

Jurassic Park Trilogy, Terminator Trilogy போல 'கோழி சாலையை கடந்தது ஏன்?' மூன்றாம் பாகமும் புதிய இயக்குனரால் இயக்கப்படுகிறது. (ஒரிஜினல் இயக்குனரின் அனுமதி இல்லாமல் ;)(http://sodabottle.blogspot.com) இதற்காக பல மாதங்களாக கிடப்பில் கிடந்த blog-ஐ தூசி தட்டி எடுத்திருக்கிறேன்.

சாண்டில்யன்:
அத்தியாயம் 53
விஜயநகரத்து கோழி

பல்வேறு ஊர்களில் பல முட்டைகள் போட்டதும், யாரும் கடக்காத சாலைகள் பலவற்றை சுலபமாக கடந்ததனால் 'சாலை கடந்தான்'* என்ற சிறப்பு பெயர் பெற்றதும், காந்தளூர் சாலையை கடக்கும் போது உயிர் துறந்ததனால் 'காந்தளூர் சாலை துஞ்சிய கோழி' என பின்னாளில் வரலாற்றில் பிரசித்தி பெற்றதும், 'முர்கி' என வட நாட்டவர்களால் அழைக்கப்பட்டதுமான விஜயநகரத்து கோழியை இளையகுமாரன் அந்த சாலையில் அந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அதனால் சற்றே கலக்கமுற்றான் என்றாலும் 'உதயகிரி கோழி பண்ணையில் இருக்க வேண்டிய கோழி இங்கு ஏன் வந்தது?' என சிந்தனையில் ஆழ்ந்தான். கோழியை பற்றி இளைய குமாரன் தீவிர சிந்தனையில் இருந்தாலும், கோழியை பார்த்த அதிர்ச்சியில் 'ஆஆஆ' என அலறி அவன் மேல் சாய்ந்துவிட்ட மயில்விழி, இன்னமும் மூர்ச்சை தெளியாமல் அவன் மேல் விழுந்து கிடந்ததாலும், அவள் அங்க லாவண்யங்கள் அவன் மேல் பலவாராக மோதியதாலும் பல இன்ப துன்ப வேதனைகளுக்கு உள்ளானான். மயில்விழியின் தோள்களை பற்றி தூக்கிவிட்டு அவள் மூர்ச்சையை தெளிவிக்கலாமா என்று எண்ணினாலும், மயக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணை தொட்டு தூக்குவது தவறு என்று வழிவழியாக வந்த அவன் தமிழ் பண்பாடு உணர்த்தியதால், ஒன்றும் செய்யாமல் அவளுக்கு அடியிலேயே படுத்து கிடந்தான். இதனை தூரத்தில் இருந்து விஜய நகரத்து கோழி பார்த்து கொண்டிருக்கிறது என்பதையும் கவனித்த இளையகுமாரன், அதனை குறுவாளெறிந்து கொன்று விடலாமா என யோசித்தான்.

இதற்குள்ளாக விஜய நகரத்து கோழி மெதுவாக சாலையை கடக்க ஆரம்பித்தது.
(தொடரும்...)
---------------------------------------------------------
* - பண்ணைபுரம் கோழி பண்ணை கல்வெட்டு
(வரலாற்று குறிப்பு : 2003-ம் ஆண்டு கோழி சாலையை கடக்கும் போது லாரியில் அடிபட்டு இறந்தது - The Hindu dt. 11.12.2003)

(என் குறிப்பு : விஜய நகரத்து கோழிக்கும், இளைய குமாரன்-மயில் விழிக்கும் எந்த சம்மந்தமும் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை.)



[+/-] Expand/Collapse

4 comments:

Bala said...

அடெய், சிக்கன் franchise a எங்கிட்ட இருந்து உருவிட்டியேடா...

முதல் பதிவே தூள்... அடுத்து கல்கியோட கோழி பத்தி போடு..

-பாலா

Anonymous said...

thamizileye ennakku piditha ezhuthaalar saandilyan. meendum avarudaya ezuhthu nadayai ( ??!!!) paarkyil romba santhoshamm...

- Jagan

Anonymous said...

சார்...அடுத்த ரிலீஸ் எப்போ... - bala

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

ithellaam naama ezhuthanumnaa ezhutharom?

athuvaa appo appo varum....