About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2004/07/27

முதலாளித்துவம் vs. பொதுவுடைமை

ப்ரதீப் மேற்கண்ட தலைப்பில் எழுதிய பதிவுக்கு என்னுடைய மறுமொழி. ஒரிஜினல் பதிவு இங்கே

>இந்த பூமியில் எல்லோருக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை எல்லாம் தாரளமாய் தான் இருக்கிறது என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்!

இருக்கிறது.
இடம் - இதற்கு இங்கு வீடு என அர்த்தம். இதை உருவாக்க மனித உழைப்பு தேவை
உணவு - இதை உற்பத்தி செய்யவும் உழைப்பு தேவை
உடை - ditto
இவை எல்லாம் குறைவான அளவே உள்ளன.

>முதலாளித்துவம் எங்கே எப்போது தொடங்கியிருக்கும்? மனிதன் வேட்டை ஆடித் திரியும் போது தொடங்கி இருக்க வாய்ப்பில்லை..அப்போது கிடைத்ததை எல்லோரும் சமமாகவே பகிர்ந்து உண்டார்கள்! பிறகு எங்கே? எப்படி? ஏன்?

கண்டிப்பா அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்ல. ஒரு மனிதன் வேட்டையாடிட்டு வந்து தன்னோட குடும்பத்துக்கு மட்டும் தான் கொடுத்திருப்பான். இப்ப கூட மிருகங்களை பாருங்க. எதாவது மிருகம் அப்படி செய்யுதா? கூட்டமா வேட்டையாடும் மிருகங்கள் இருக்கு. ஆனா, சும்மா உக்கார்ந்து ஓசியில சாப்பிட யாராலும் முடியாது.

>என்று நீராவியினால் இயங்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டனவோ அன்று தொடங்கியது முதலாளித்துவம்

அதற்கு முன்பிருந்தே இருந்திருக்கிறது. நிலக்கிழார்கள், ஜமீந்தார்கள் நிலத்தின் உரிமையாளர்களாக இருக்க அதில் பலர் கூலி வேலை செய்வது நம் நாட்டில் காலம் காலமாக நடந்து வருகிறது. Industrial revolution மேல் பழியை போடுவதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. Industrial revolutionக்குப் பிறகு தான் மனிதனின் வளர்ச்சி exponentialஆக உயர்ந்திருக்கிறது. கார், பைக்கில் போய்க்கொண்டு, டி.வி. பார்த்துக்கொண்டு, செல்·போனில் பேசிக்கொண்டு, ·பேன், ஏ.சி. போட்டுகொண்டு என Industrial revolution-இன் அணைத்து பயன்களையும் அனுபவித்துக் கொண்டு அதனால் தான் உலகம் கெட்டுவிட்டது என கூறுவது ஏற்புடையது அல்ல.

> முதலாளித்துவத்தால் வந்த வினைகள்
1. வேலை இல்லாத் திண்டாட்டம்
2. வறுமை
3. உலக மகா யுத்தங்கள்!
4. விபச்சாரம்
5. ஊழல்
6. பெண்ணடிமை


1.வேலை இல்லா திண்டாட்டத்திற்க்கு முக்கிய காரணம், மக்கள் தொகை பெருக்கம். Industrial revolution-ஆல் வேலை வாய்ப்பு பன்மடங்காக உயர்ந்திருக்கும் என நினைக்கிரேன்.
2.இதுவும் அதிகமாகவில்லை. பணக்காரனுக்கும் எழைக்கும் உள்ள வித்தியாசம் தான் அதிகரித்திருக்கிறது. முன்பு தேவைகள் கம்மி. இப்போ தேவைகள் ஜாஸ்தி. பழங்கால scale-ஐ வைத்து பார்த்தால் இப்போது நாட்டில் உள்ள 99 சதவிகிதம் பேர் பணக்காரர்களாக இருப்பார்கள் என நினைக்கிறேன்.
3.மனிதன் காலங்காலமாக போர் புரிந்து வருகிறான். உலக மகா யுத்தத்திர்க்கும் முதலாளித்துவத்திர்க்கும் என்ன சம்மந்தம் என தெரியவில்லை. பொதுவடைமை நாடான சைனா நம் மீது போர் புரிந்ததர்க்கு முதலாளித்துவமா காரணம்? எல்லாம் மண்ணாசை தான்.
4.அடப்பாவிகளா, இதுவும் காலம் காலமாக இருந்து வந்திருக்கு. நல்லதங்காள் வூட்டுக்காரரை விபச்சாரி கிட்ட தூக்கிட்டு போனாலாம்!
6.Ditto.
5.டொமிங்கோ பயாஸ் என்ற போர்துகீசியன் 16ம் நூற்றாண்டில் விஜயனகரம் வந்திருக்கிறான். அங்கு ஏதோ ஒரு கோவிலுக்கு போயிருக்கிறான். அங்கு இருந்த காவலாளி அவனை கர்ப கிருகத்துக்குள் விட வில்லையாம். 'I gave him something and he let me in' என்று எழுதியிருக்கிறான். நம் நாட்டில் இந்த something-உம் ரத்தத்தில் ஊறிய ஒரு விஷயமாக இருக்கிறது

உலக யுத்ததிற்கான காரணம் முதலாளித்துவம் என்பதற்கான லாஜிக்கும் உதைக்கிறது. 'பொன்னாசை' என்பதே Industrial revolution-க்கு அப்புறம் தான் தோன்றியது போல எழுதப்பட்டிருக்கிறது.

ஆக, முதலாளித்துவம் பற்றி உங்கள்/ராகுல்ஜியோட fundamental premises-ஏ தப்பா இருக்குன்னு நினைக்கிறேன்! என்ன சொல்றீங்க?



[+/-] Expand/Collapse

2 comments:

பிரதீப் said...

Enakku ezhuthumbothe theriyum, ooralavukku book padichittu gnabakam vanthathai ezhuthurom, ippadi ellam ethirpu kural varumnu..irunthalum, sari appo thaan innum deepa athai padikkalamnu thaan ezhuthinen..

ithai pathi namma discuss seiyyalam!

"i am not saying communism is the best solution, i found communism is better than the capitalism"

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

உலகம் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்குக் முக்கிய காரணமே competition-உம், competing ideas-உம் தான். கவலையே படாதீங்க. அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவோம்.