நீண்ட நாட்களுக்கு பிறகு வலை பதிகிறேன். இரவு 2.45 ஆகிறது. மழை பெய்துகொண்டிருக்கிறது. பெங்களூரில் சாதாரணமாகவே நடுங்கிக்கொண்டே வண்டி ஓட்ட வேண்டியிருக்கும். மழையில் நனைந்து கொண்டு செல்வதெல்லாம் நடக்கிற காரியமில்லை. அலுவலக வண்டி கிளம்ப இன்னும் கால் மணி நேரம் இருக்கிறது. அது வரை ஏதாவது தட்டுவோம்.
நம்ம தேசியக்கொடி இருக்கே, அதன் நிறங்கள் எதை குறிக்கின்றன? காவி - தியாகம், வெள்ளை - சமாதானம், பச்சை - பசுமை. இப்படித்தான் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்தார்கள். நானும் அதை தான் நம்பிக்கொண்டிருந்தேன். திடீர்னு ஒரு சந்தேகம். பாகிஸ்தான் கொடில ஏன் பச்சை மட்டும் இருக்கு? ஓ! பச்சை முஸ்லிம்களுக்கு புனித நிறம். (அட, கொஞ்சம் வெள்ளையும் இருக்கு! அது அங்க இருக்க மைனாரிட்டிகளை குறிக்குதுன்னு எங்கேயோ படிச்சோமே!) சரி, அதே பச்சையும் வெள்ளையும் நம்ம கொடிலயும் இருக்கே! அப்படி பாத்தா காவி எதை குறிக்குதுன்னு கண்டு பிடிக்கிறது ஒன்னும் கஷ்டமே இல்ல! அடப்பாவிகளா, இப்படி தான் நம்ம கொடியோட கலர் எல்லாம் முடிவு பண்ணுனீங்களா. காவி - இந்துக்கள், பச்சை - முஸ்லிம்கள், வெள்ளை - இந்து முஸ்லிம் சமாதானம் அல்லது கிருஸ்துவர்கள். சரி எப்படியோ வெச்சுக்கோங்க. ஆனா ஏன் இருக்கறவன் எல்லாரயும் கேனயனாக்கறீங்க?
இத எழுத ஆரம்பிச்சது புதன்கிழமை இரவு. பதியறது சனிக்கிழமை மதியம். என் சோம்பேரித்தனத்துக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு.
1 comment:
A point to think..but who cares Karthik..
Post a Comment