மக்கள் T.V
ஆனாலும், இவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
அதில் இது ஒன்று.
'' '' குரைக்கிற நாய் கடிக்காது"
வெகு நாட்களாக நான் குழம்பிக் கொண்டிருந்த ஒரு விஷயம் இது.
ஏன் குரைக்கிற நாய் கடிக்காது? அப்பாடா !!!
விடை கிடைத்தது..''பழ மொழியும் புதிரும்'' என்ற நிகழ்ச்சியின் மூலம்.
" "குழைகிற நாய் கடிக்காது " "
ஆகா, நம் மக்களே மக்கள்.
எப்படி திரிந்து விட்டுள்ளது ?
எனக்கு எப்போதுமே இது போன்ற விஷயங்களில் ஆர்வம் உண்டு.
நானும் என் பங்குக்கு எதையாவது யோசித்துக் கொண்டிருப்பேன்.
அதில் ஒன்று
" " காகா பிடிப்பது " "
இது "கால் , கை " " பிடிப்பது. அது திரிந்து '''காக்கை பிடிப்பது''' என்றாகி நாளடைவில்
'''காக்கா பிடிப்பது'' என்றாகிவிட்டது. [ இது என் சொந்த சரக்கு ].
இதுவும் மக்கள் T.V யில் வந்து விட்டதா தெரியவில்லை. [என் வீட்டில் T.V இல்லை.]
எப்போதாவது பார்க்க நேரிடும்.
ஆக, என் இனிய தமிழ் மக்களே, இனி "கால், கை''' பிடியுங்கள்.[ முடிந்த வரை தவிர்த்து விடுங்கள்].
கார்த்திக்
1 comment:
Eye Opener;)
"குழைகிற நாய் கடிக்காது" thanks for correcting. I will check out that program, really makkal tholaikaatchi gives useful shows than cinema and all.
Post a Comment