About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2008/01/17

என்ன முதல்வர் இவர்?

முன்பெல்லாம், நிறைவேற்றாத வாக்குறுதிகளை ''' தேர்தல் வாக்குறுதி போல் ''''என்று கேலி செய்வோம்.
இப்போது, முதல்வர் , எல்லா தேர்தல் வாக்குகளையும் நிறைவேற்றிக் கொண்டே வந்தால், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவர்களை, கேலி செய்ய என்ன சொற்றடொரை உபயோகிப்பது ? என்ன ஆயிற்று இந்த முதல்வருக்கு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக அல்ல நடக்கிறார்.

ரஜினி: : :
அது எப்படி இவரால் மட்டும் இப்படி பொன்மொழிகளாக உதிர்க்க முடிகிறது.
" " சாப்பிட்ட சாப்பாட்டை தானே வைத்துக் கொண்டால் , உடம்பு கெட்டு விடுவது போல் , ஒருவன் தான் சம்பாதித்த செல்வத்தை தானே வைத்துக் கொள்ளக் கூடாது " "
இதை பற்றி என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.

ஷ்ரேயா: :
அம்மணி ஆனாலும் படு கவர்ச்சியாகத்தான் வந்திருந்தார்....அதெல்லாம் தப்பில்லை. அவர் கால் மேல் கால் போட்டு, [அதுவும் ரஜினியின் முன்பு] என்பதுதான் தப்பாகிவிட்டது. அவருடைய கவர்ச்சி உடை சினிமாவில் வந்த போது எங்கே போயினர் இவர்கள் அனைவரும் ? சினிமாவில் வந்தால் , கலாச்சாரம் கெடாது. விழாவுக்கு வந்தால்தான் கெட்டு விடுமா? விசித்திரமாக இருக்கிறது.

பொங்கல்: :
அதென்ன , முதல்வர் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பு கூடிக் கொண்டே போகிறது ? சமத்துவ பொங்கல் என்று சொன்னாலும் சொன்னார். சர்ச்சில் பாதியார்கள் முதல் எலோரும் பொங்கல் வைக்க கிளம்பி விட்டனர்.........புது பழக்கமாக பட்டாசு வேறு. எப்படியோ மக்கள் சந்தோஷமாக இருந்தால் சரி.
Sweetest Karthikeyan

1 comment:

Jeevan said...

"சமத்துவ பொங்கல் என்று சொன்னாலும் சொன்னார். சர்ச்சில் பாதியார்கள் முதல் எலோரும் பொங்கல் வைக்க கிளம்பி விட்டனர்........."
Unity and Happiness is must :)