
இப்படியும் ஒரு மணப் பெண்
இது என்னுடைய [ கார்த்திக் அம்மா ] கல்யாண photo. எந்த மணப் பெண்ணாவது
தாலியை இப்படி எட்டிப் பார்த்துக் கொண்டிருப்ப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஒரு மணப் பெண்ணிற்குரிய நாணம், பதட்டம், பயம்.....ஏதாவது அந்த முகத்தில் இருக்கிறதா?....கொடுமை !!!!
வாழ்க்கை என்னும் பெரிய கடலில் போராடப் போகிறோம் என்பது போன்ற எண்ணங்கள் ஏதாவது ???
mentally retarded கூட இப்படியிருக்காது. இதில் ஒரு உலக மஹா கல்லூரியில் M.A படிப்பு வேறு.....
""பார்வைய்லே குமரியம்மா,
பழக்கத்திலே குழந்தையம்மா ""
என்பது எனக்குதான் பொருந்தும்.....[கழக அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற திருமணம் என்பதால் புரோகிதர் இல்லா திருமணம். ]


எல்லா மகிழ்ச்சியும்,சிரிப்பும் நின்று போய் மூன்று வருடங்களாகி விட்டன.இன்று எல்லாமே சூனியம்தான்.