அன்புள்ள வலை நண்பர்களுக்கு,
அவசியம் இந்த பதிவை படித்து விட்டு முடிந்தவரை பிறருக்கும் அனுப்புங்கள்.
இது என் சொந்த கதை, ஆனால் , நாளை உங்கள் கதையாக மாறவேண்டாம் என்பதற்காகவே இந்த பதிவு.
நான் 1983 ல் ஒரு நிலம் வாங்கினேன். அந்த நிலத்தை " கிரயம்" [registration] செய்து பத்திரத்தை [documents], பத்திரமாக [ஜாக்கிரதையாக ] கொண்டுவந்து விட்டில் வைத்துக் கொண்டுவிட்டேன். இப்போது, சுமார் 25 வருடங்களுக்கு பிறகு, அந்த நிலத்திற்கு வேலி போட செல்லும் போது, சர்வேயர் வைத்து நிலம் அளக்க வேண்டும் என்று பக்கத்து நிலத்துக்கு உரியவர் [ இத்தனைக்கும் நெருங்கிய சொந்தம் ] சொன்னதால், வி.ஏ.ஒ. ஆபிஸ் போனால், அந்த வி.ஏ.ஒ. ஒரு காலண நோட்டைsome good old ,tattered record எடுத்து நான்கு பக்கங்கள் திருப்பி பார்த்து விட்டு, '' நிலம் உங்கள் பேரிலேயே இல்லை. '' என்று திருவாய் மலர்ந்தார். அதிர்ந்து போன நான், என் கிரய பத்திரம் இது என எடுத்து காட்டினாலும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. ''எங்கள் ரெகார்டில் இப்படித்தான் இருக்கிறது '' என்று அடித்து கூறி விட்டார்.
பிறகு ஈ.சிE.C [ENCUMBERANCE CERTIFICATE ]என்ற ஒன்றையும்Rs 4000 செலவு செய்து அதிலும் என் பெயர்தான் இருக்கிறது என்று வாதாடியும் அவர் காட்டிய தெனாவெட்டு !!
என்னை கேட்ட கேள்விகள் ???? ஒரு மடத்தனமான கேள்வியை கேட்டுவிட்டு ''உங்களுக்கு இது கூட புரியவில்லையா ?'' '' என்று நக்கல் வேறு. நீங்கள் உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் ,எந்த கலெக்டரிடம் போய் சொன்னாலும் கடைசியாக என்னிடம்தான் வரவேண்டும் . நான்தான் ரெகார்டில் பெயர் மாற்றித் தர முடியும் '' என்று சவால் விட்டுள்ளார். அவர்களாகவே ஏதோ ஒரு பெயரை எழுதி கொள்வார்களாம். அதுதான் சட்டப் படியும் செல்லுமாம். ''''உண்மை.''
இந்த சமயத்தில்தான், விசுவின் அரட்டை அரங்கம் பார்க்க நேர்ந்தது .அதில் ஒருவர் இதே கதையை சொல்லி, '' இவர்களிடம் சட்டம் பேசினால் காரியம் நடக்கவே நடக்காது. செய்ய வேண்டிய ''பரிகாரங்களை '' [கொடுக்க வேண்டிய லஞ்சத்தை கொடுத்து ] பட்டா எண் [பட்டா நம்பர் ] பெற்றுக் கொள்ளுங்கள் .அப்போதுதான் நிலம் உங்களுக்கு சொந்தம் என்று சொன்னார்.
இந்த பதிவின் நோக்கமே இதுதான். கஷ்டப் பட்டு லோன் வாங்கி ஈ.எம்.ஐ. கணக்கு செய்து, வட்டி கட்டி நாம் வாங்கும் நிலத்திற்கு, இவ்வளவு பிரச்சினைகள் உள்ளன. இளைய சமுதாயமே, உங்களுடைய கணினி அறிவு எல்லாம் அந்த எஸ்.எஸ்.எல்.சி மட்டுமே படித்த v.a.o. விடம் செல்லாது. எனவே எடுக்க வேண்டிய , கொடுக்க வேண்டிய எல்லாம் முறைப் படி செய்து உங்கள் சொத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள். பி.கு.
இந்த லஞ்சம் கொடுப்பது , வாங்குவது என்ற விசயத்திற்கு நான் மிகப் பெரிய எதிரி. இன்னும் லஞ்சம் கொடுக்கவும் இல்லை. பட்டா நம்பர் என் பெயரில் மாறவும் இல்லை ..... so my dearest friends, please take all precautionary measures to ensure that the land is yours. Regarding flats, 'what must be done?' ...better get to know everything before you buy anything, be it land or flat. I guess there is little problem with flats and especially, with the reputed builders we have no problems at all.
Wishing you all the best
7 comments:
கள்ளத்தனமாக செயல்படும் அரசு அலுவலகங்கள். நானும்
லஞ்சத்திற்கு எதிரானவன், ஆனால் நாம் சொல்வதை யார்
புரிந்துகொள்கிறார்கள்.
காரியக்காரர்கலுக்கு காரியத்தின்மேல் தான் குறி, தங்கள்
வேலை தடையின்றி நடைபெறுகிறதா... இதனால் நியாமான
கோரிக்கைகள் நிராகரிக்கபடுகிறது. என்று சரிவர இயங்குமே-
ர இந்த அரசு இயந்திரம்?
very useful aunty... more like SIVAJI movie story... but no solution to this problem... i thought on this lots of times couldnt frame a solution....
I tried to translate your beautiful language but Google Translator didn't work with this language.(Hindi?)
But you're right writing about precaution before purchase.
Wishing you all the best too.
Happy Deepavali to you, dear Ponniyinselvan!
jeevan.
often i used to wonder whether my blog is read by someone special. See, suddenly, so many VAO offices are inspected by vigilance authorities and many of them are suspended.Hope this trend will continue and some good will happen to innocent people like us.
amma
dear Aravindh,
I did not see the movie. now, [ in june only ] i bought T.V. now only i see some movies. As long as i was working i had little time to view movies. Karthik will get some CD s [ mostly Eng , like Lord of the Rings ] and the movies i enjoyed were Gilly, M.Kuaran s/o Maha, and Thiruda Thirudi because many scenes in those movies were like what senthil would do. so we had it in the PC and used to view some scenes repeatedly.
Anyhow, i don.t think these people will ever change. நாய் வாலை நிமிர்த்தவே முடியாது.
அன்பு நண்பியே,
இது தமிழ். கூகிள் தமிழ்.முயன்று பாருங்கள்.
தீபாவளியும் இல்லை.எந்த பண்டிகையும் இல்லை.எல்லாம் நின்று போய் மூன்று வருடங்களாகி விட்டன.வாழ்க்கை இருண்டு போய் மூன்று வருடங்களாகி விட்டன.
அன்புடன்
கார்த்திக் அம்மா
Post a Comment