பூனூல்//பூ+நூல்//பூணூல்
இந்த சர்ச்சை தீரவே தீராது.இதன் பிண்ணனி என்ன? இதன் தாத்பரியம் என்ன ? என்பது புரியாமல் ஒரு தாழ்வு மனப்பாண்மையில் இந்த நூலை பார்த்து பயந்து நாம் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.
நான் ஒன்றும் மெத்தப் படித்தவளும் அல்ல . மேதாவியும் அல்ல. ஆனால் . எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். [ அனைத்து வகையான விமரிசனங்களும வாக்கு வாதங்களும் வரவேற்கப் படுகின்றன ]
முன்னொரு காலத்தில், மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற கல்லூரிகளும் இல்லை. இப்போது இருப்பது போல் கல்வித் துறை, மருத்துவ துறை, மின்வாரியம் என்று அரசாங்க அங்கங்கள் இல்லை. அதனால், ஒரு தொழிலுக்கு ஒரு குடும்பம் என்று வகைப் படுத்த பட்டனர்.
இந்த நிலையில்தான் அவரவர்க்கு உரிய பொறுப்பை நினைவில் நிறுத்த ஒரு கருவியாகத்தான் இந்த பூணூலை நடைமுறைப் படுத்தினர்.
பிராமணர்களுக்கு 5 நூல்.
அவர்களுடைய கடமைகள் 1] தன் குடும்பத்தை காத்தல், மன்னருக்கு ஆலோசகர், படிப்பு சொல்லித் தரும் ஆசான் [மந்திரங்கள் ], கோவில் கைன்கரியம், என 5 கடமைகள். எனவே அவர்கள் 5 நூல் கொண்ட பூணூலை அணிவர்.
அடுத்து சத்திரியன்: 4 நூல்: கடமைகள் 4: தலையாய கடமை நாட்டை காப்பது. நாட்டில் எந்த ஒரு குடிமகன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவனைக் காக்க தன் உயிரை தியாகம் செய்தாவது காப்பாற்றுதல் ,மற்றும் மேற் சொன்ன பிற கடமைகள்.
சத்திரிய பிரம்மசாரிக்கு மூன்று கடமைகள்.
அத்னால்தான், கந்த சஷ்டி கவசத்தில்,
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
என்று சொல்வது.
அடுத்த குலமாகிய வேளாண் பெருமக்கள். இவர்களுக்கு தாய் தந்தை குடும்பத்தை காத்தல் என்ற கடமையும், வேளாண்மை செய்து மற்ற குடிகளுக்கு உணவு தருவதும் ....ஆக அவர்கள் பூணூலில், இரண்டு நூல்கள்.
பெண்ணுக்கு மாங்கல்யமும் இதே கணக்குதான்.
ஆனால், காலப் போக்கில், பல பழக்கங்கள் மாறி விட்டன. என்னுடைய தாத்தா, பெரியப்பா இருவரும் இறுதி வரை பூணூல் அணிந்திருந்தனர். என் தந்தை மட்டும் தன் ஆங்கிலேய கல்லுரி கல்வியினால், பூனூல் அணிய வெட்கப் பட்டுக் கொண்டு கழ்ற்றி விட்டார். ஆனால், இன்னும் எங்கள் திருமண சடங்குகளில் ஒன்றாக வெள்ளி பூனூல் அணிவர். [ நான் ஜாதியை பற்றி சொல்ல விரும்பவில்லை. எனக்கும் கார்த்திகிற்கும் அது பிடிக்காத விஷயம் ]
ஆனால், காலம், பல விஷயங்களை மாற்றி விட்டது என் று கூறவருகிறேன்,.
இப்படி உண்மை ஒரு புறமிருக்க, பூணூல் ஒரு குலத்திற்கு சொந்தம் என்று அவ்ர்களும் '' ''பெருமையாக,, கர்வமாக '' '' நினைத்துக் கொள்ள , நாமும் அவர்களை பார்த்து ஒரு தாழ்வு மனப்பாண்மையில் மறுகுவதும்,,,
Gandhiji once said '' It's not that they feel superior, but that we feel inferior.''
என்ன ஒரு அருமையான பொன்மொழி.
அடுத்து திருநீறு:
இதுவும் நம் முன்னோர்களால் அறிவியல் பூர்வமாக ஒரு skin cream and powder என தோலை பாதுகாக்க பயன்படுத்தப் பட்டதே ஒழிய எந்த மத்மோ , கடவுளோ இதில் சம்பந்தப் படவேயில்லை.
காலம், + சில சுயநலவாதிகள செய்த தந்திரம் இது.
இன்றும் காயப் பட்ட இடத்தில் திருநீறை பூசி குணமாக்குதல வழக்கத்தில் உண்டு.
ஏற்கனவே குழம்பிக் கொண்டிருக்கும் நம் நாட்டில், இன்னும் புதுப்புது சர்ச்சைகளும் சண்டைகளும் வேண்டாமே என்பதற்கே இந்த பதிவு
அன்பிலும் அன்பான கார்த்தியுடன்+ கார்த்திக் அம்மா
2 comments:
I don't know any background about these, and what u written is very new reason. If these create issue, rules people is so distinguish and distress, thus I don't believe in these.
very true.. lots of such things are followed blindly, resulting in blind inferiority, superiority complexes
Post a Comment