About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2008/11/14

Karthik's B'day--D'day--strange similarities

This is what happened exactly and it's neither an exaggeration or boasting of any type.
My birthday : 14.11.1958
marriage: 14.12.1980

karthik's birthday: 14.11.1981

As soon as i got married we [my hubby and i settled in TNEB quarters near Bhavani. ] my hubby was working as A.E .நான் கல்லூரி முடித்த உடன் திருமணம் . ஒன்றும் சரிவர புரியாத நிலை. தஸ் புஸ் என்று ஆங்கில இலக்கியம் M.A படித்துவிட்டு, டான்ஸ் , ட்ராமா, என்று காலேஜை கலக்கி விட்டு ,திடீரென சூழ்நிலை [ மாமனார், மாமியார் etc, etc ] என மாற சற்று தடுமாறிக் கொண்டிருந்த வேளை.
ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தது போல், என் கணவர் ஒரு workaholic.புது மனைவி, தனிக் குடித்தனம் என்றவுடன், சினிமாவில் வருவது போல் ஆடல், பாடல் , etc எல்லாம் தெரியாது அவருக்கு.
சரி. பதிவின் விஷயத்திற்கு வருவோம்.
விடிந்தால் Nov.14 th. அன்று இரவு 12 மணிக்கு சுரீர் என வயிற்று வலி. [ தனிக் குடித்தனம்] flats exclusively built for EB staff in an isolated area 25 km away from nearest town and 75 km away from Salem.
அன்று என் பிறந்த நாள் என்பதால், 20 கி.மி.தூரத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு , சேலம் சென்று சினிமா பார்த்து விட்டு அங்கிருந்து என் அம்மா வீட்டிற்கு சென்று b'day celebration முடிப்பது என்று திட்டம். இதில் இன்னொரு மிகவும், மிகவும் முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவென்றால், இந்த ஊர் சுற்றல் எல்லாம் by bike. [ 350 cc bullet. ]
இப்படி கூட ஒரு அறிவில்லாத பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா? ஒரு நிறை மாத கர்ப்பிணி. பைக்கில் ஊர் சுற்ற திட்டம்.
மணி 12. இரவு. வயிற்றில் வலி ஆரம்பம். கணவரை எழுப்பி " என்னங்க " என்றேன். அரைத் தூக்கத்திலேயே 'happy birthday ' என்று சொல்லிவிட்டு தூகத்தை தொடர்ந்தார். ஒரு 5 நிமிடம் கழித்து மீண்டும் அவரை எழுப்பி ' என்னங்க " என்றேன். " என்ன " என கேட்டார். "எனக்கு வயிறு வலிக்குதுங்க " என்றேன்.
எழுந்து உட்கார்ந்தவர், " இப்போது என்ன செய்யலாம் ? " என்றார். [ மனைவிக்கு பிரசவ வலி. கூலாக கேள்வி. ] . " சரி. தூங்குங்கள்..சற்று நேரம் கழித்து பார்க்கலாம் " என்றேன். படுத்த மனிதர் அடுத்த வினாடி ஆழ்ந்த தூக்கம்.
மணி 1 a.m,,,2 a.m,,,,,,,3 a.m,,, நான் படுக்கை அறைகுள்ளேயே நடந்து கொண்டிருக்கிறேன். 4 மணிக்கு மேல் வலி அதிகரிக்க , மிக மிக புத்திச்சலித்தனமாக சுடுதண்ணீர் வைத்து குளித்து விட்டு, அவருக்கும் சுடுதண்ணீர் வைத்து எழுப்பினால், மனிதர் எழுந்து ஆசுவாசமாக குளித்தார்.
மணி 5a.m.... 5.30....5.45 ....அதற்கு மேல் முடியவில்லை. " ஏங்க , ஜீப் வர சொல்லுங்க " என்றேன். அது ப்ரொஜெக்ட் என்பதால், எல்லா A.E ஸுக்கும் ஒரு வண்டி [ஜீப் அல்லது வேன் ] கொடுத்திருப்பார்கள்.] [ 6 A.E s. in our flats there were 8 A.Es. so there would be 8 vechicles. *there's another episode about these jeeps which i will tell you later. ]
Phone செய்து ஜீப் ட்ரைவர் வந்து விட்டார். பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பாட்டி தானும் துணக்கு வருகிறேன் என்று கூறியும் வேண்டாம் என மறுத்து விட்டு நானும் என் கணவரும் மட்டும் ஜீப்பில் 75 கி.மீ. [ சேலம் ] செல்கிறோம். போகும் வழியில்தான் அம்மா வீடு. போய் அம்மாவையும் அப்பா்வையும் கூட்டிக் கொண்டு செல்வதாக திட்டம். அம்மா வீட்டிற்கு அடுத்த வீடே ஒரு மருத்துவ தம்பதிகள். ஜீப்பில் இருந்து இறங்கி, நான் " நீங்கள் போய் அம்மாவை அழைத்து வாருங்கள் " என்று சொல்லிவிட்டு அந்த மருத்துவரிடம் செக்கப்பிற்கு ? சென்றால் , அவர்கள் திகைத்து, மலைத்து, அலறி, "கலா, உனக்கு சீரியஸ்னே புரியவில்லையா? உடனடியாக சேலம் போ " என்று [ 30 k.m from there } பதற "சரி " என்று சொல்லிவிட்டு அம்மா வீட்டிற்குள் நுழைந்தால்,,,,மாமியார் [ ஒரு ஸ்கூல் H.M ] தன் செல்ல மருமகனுக்கு காபி போட்டுக் கொண்டிருக்கிறார்.
நிலைமை புரிய , கை கால் உதறலெடுக்க என் அம்மா போட்டது போட்டபடி ,ஓடி வந்து ஜீப்பில் ஏற [ என் தந்தை எங்கோ வெளியில் சென்றிருந்தார் .] ஜீப் ட்ரைவர் எமர்ஜென்சி விளக்கை போட்டுக் கொண்டு பறந்தார்.
மருத்துவ மனையை அடையும்பொழுது மணி 8.35. கார்த்தி பிறந்தது 8.45.மருத்துவ மனையே அலறிவிட்டது.
விஷயம் கேள்விப்பட்டு அலறிக் கொண்டு தந்தை ஓடிவர , எல்லாம் அவசர கதிதான்.
கார்த்தியின் பாதிப் பிறப்பு ரோட்டில்தான்.
NOW,
Aug.26. 2005. time 8.45. B'lore.
karthik and i have breakfast and karthik leaves home by 8.50,a.m the exact time ,,,i saw his face on 14.11 .1981.
travels by bike. accident at 9 a.m. taken in an auto. reaches hospital and ***********.
பாதி பிறப்பும் ரோட்டிலே. பாதி *றப்பும் ரோட்டிலே.
என்ன ஒரு வேதனையான ஒற்றுமை?
இன்று என் செல்ல மகன் பிறந்த நாள். ...... ........ஊமையாக நான்

9 comments:

Jeevan said...

so coincident... i just don't know if u were aware of the seriousness that time the first time in ur life. i could not tell anything more, speechless.

Krishna Ram Kuttuva Jeyaram said...

i usually tease him his bday being children's day.. unmayile kuzhanthai manosoda ellar manasulayum idam pidichirunthan karthik.

krystyna said...

Hi Dear Amma!
Happy Birthday to you!

This Day is also Karthik's Birthday. This not offten happen.
He is in our hearts forever!

Thank you Amma for sharing
your story. I understand only little.

You are in my thoughts.
Love and hugsss.
God bless you!

Anonymous said...

I also agree with Jeevan.

Radha

நட்புடன் ஜமால் said...

பேச்சற்ற நிலை.

ஹேமா said...

//கார்த்திக் என் கண்ணே கார்த்திக் என் கண்ணே
என்ன வழி...என்ன வழி?
ரத்தத்தை உருக்கி கண்ணீராஇ கதறுவதை
ஒழிக்க என்ன வழி?
இரவில் தூங்க மறுக்கும் கண் இமைகளை மூட
வைக்க என்ன வழி?
தொண்டைக்குள் இறங்க மறுக்கும் உணவை
உண்ண என்ன வழி/
என்ன வழி?
மனதில்
எவ்வளவு வலி?

என் கண்ணே

ஆதவனில்லா அகிலம் போல்
பார்வையில்லா பாலகன் போல்
பரிதவிக்கும் இந்த பாவியை
ஓடி வந்து ஓட்டிச் செல்
நீ சென்ற நிலவினுக்கே.//

கார்த்திக் அம்மா,வாசித்தேன்.நிறைய உங்கள் வலிகளை வாசித்தேன்.
ஆறுதல் சொல்லும் நிலையில் நீங்களூம் இல்லை.நானும் இல்லை.பார்க்கலாம் ஆண்டவனின் விளையாட்டு எந்த மட்டில் என்று.

கபீஷ் said...

What to say! I'm speechless

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

என் அன்பு நண்பர்களே,
தங்கள் வருகைக்கும், வார்த்தைக்கும் நன்றி.புது நண்பர்கள் வரவு கண்டு மகிழ்ச்சி. காரணம், என் செல்ல கண்மணி கார்த்தியை இன்னும் அதிகம் பேர் அறிந்து, இன்னும் அதிகம் பேர் அவனை விரும்ப ஆரம்பிப்பதால் வரும் மகிழ்ச்சி.
நன்றியுடன்,
கார்த்திக் +அம்மா

Anonymous said...

கார்த்திக்கு வாழ்த்துக்களும் அன்பான முத்தங்களும்..