About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2009/04/11

நான் கற்புக்கரசியா ?

என்னடா இப்படி ஒரு கேள்வி என்று ஆச்சரியமா?
முதலில் கற்பு என்ற வார்த்தையை வரையறுத்தலே கடினமான
விஷயம்.
உடலளவில் கற்பு என்பது ஒரு பெண்ணின் மீது கணவனைத் தவிர பிற
ஆடவனின் விரல் நுனி கூட படக் கூடாது என்ற கணக்கின் படி பார்த்தால் ????
பஸ்ஸில் அல்ல, கல்லூரியில் அல்ல, திருமணமான பின், தாயான பின், ஒரு குடும்ப , திருமண நிகழ்ச்சியில் என்று தெரிந்தோ, தெரியாமலோ, வேண்டுமென்றோ உரசுபவர்கள் எத்தனை பேர் ?
இந்த கணக்கின் படி பார்த்தால் நான் கற்புக்கரசி அல்ல.
சரி, மனதளவில் மணாளனை தவிர மாற்றானை மனத்தால்,,

மனதில் ஒரு கணமும் அரசாள அனுமதிக்கக் கூடாது என்ற கணக்கை
எடுத்துக் கொண்டால் ,
எந்த நிமிடம், [ வினாடி ] கார்த்தியின் முகத்தை கண்ணில் கண்டேனோ
அந்த நொடியே கணவனின் முகம் மறந்து, மறைந்து போய்,என் மனம் முழுக்க
அவனுக்கு அர்ப்பணித்து கணவனுக்கு துரோகம் செய்தவள் நான் என்பதால்
நான் கற்புக்கரசியா ? ?

2 comments:

ஹேமா said...

உங்களின் சிந்தனை உண்மையில் யோசிக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது அம்மா.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

Dear Hema,
There's a lot of things which have to be redefined.
I have talked a lot about Kannagi and Mathavi [ u know I was a great orator once ]...now dumb ...but u write better than me and your poems are reallyn good.So write about this also.
karthik amma