About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2011/05/17

அன்புள்ள முதல்வருக்கு,
நீங்கள் முதல்வரானதும் தங்களுக்கு நான் எழுதும் முதல் மடல் இது.
இது கண்டு தங்களுக்கு கோபம் வரலாம். அல்லது உண்மை நிலை உணர்ந்து தக்க நடவடிக்கையும் எடுக்கலாம். எப்படியாயினும்,
'' இடிப்பார் இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார்
இன்றியும் தானே கெடும் ''
தங்களைக் சுற்றியுள்ளோர் தங்கள் துதி பாடுவதே தலையாய கடமையாக கொண்டுள்ளனர். அதனால், நான் இதை எழுதுகிறேன்.
நேற்று நீங்கள் பதவி ஏற்கும் வைபவத்திற்கு, கவர்னர் வர சில நிமிடங்கள் தாமதமானதற்கு தாங்கள் எவ்வளவு தவித்துப் போனீர்கள்? காரணம் ட்ராபிக் ஜாம். காரணம் யார்?
ஆக, உங்களுக்கு இந்த ட்ராபிக் ஜாமினால் எவ்வளவு டென்சன் ஆனது? சாதாரண மக்களாகிய நாங்கள் உங்களால், ஏற்பட்ட ட்ராபிக் ஜாமினால், எவ்வளவு கஷ்டப் பட்டிருப்போம் என்பதை சிந்தித்து பாருங்கள். எத்தனை பேர் ரயிலை தவற விட்டிருப்பார்? எத்தனை பேர், தங்கள் நேர்முக தேர்வை தவற விட்டிருப்பார்? தாங்க முடியாத நோய் கஷ்டத்துடன், சாலையில் தவித்திருப்பார்?
நீங்கள் முதல்வர் என்பதால், உடனடியாக, ஐ.ஜி யை மாற்றம் செய்து விட்டீர்கள்? நாங்கள் என்ன செய்ய முடியும்?
தமிழ் நாட்டு மக்களுக்கு நன்மையே என்று சொல்லியுள்ளீர்கள். மக்கள் ஒருவிதமான மனக் கிலேசத்துடன்தான் உள்ளார்கள்.
சுப்பிரமணிய சுவாமி வேறு, எல்லா முடிவு எடுப்பதும் சசிகலாதான் என்று சொல்கிறார் . உங்கள் திறமை, அறிவின் மீது யாருக்கும் துளியளவும் சந்தேகமில்லை .தாங்களாகவே செயல்பட்டால், எங்களுக்கு நிச்சயம் பொற்காலம்தான். செய்வீர்களா?
நிறைய ,நிறைய எதிர்பார்ப்புகளுடன்,

தமிழக மக்கள் ,
கார்த்திக் +அம்மா

1 comment:

Jeevan said...

Aarambammea eppadina poga poga... potangalea oru podu, chain thirudan ella andhraku oditanganunga!

Hope she do something good.