அம்மாவிற்கு அஞ்சலி :
வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் .என்னை தன உயிராகக் கருதியவர்களில் எஞ்சியிருந்த என் தாயும் ஐந்தாம் தேதி என்னை விட்டு பிரிந்து விட்டார்.
என் அம்மா ஒரு சகாப்தம். 1950 களிலேயே கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள், என வீட்டின் சுவர்களில் எல்லாம் எழுதிய புரட்சிப் பெண்மணி.
மிகக் சிறந்த ஆசிரியையாகவும், தலைமை ஆசிரியாகவும் பணியாற்றியவர்.
சிறந்த கவிஞர் , ஓவியர், பாடகி, விளையாட்டு வீரர், நீச்சல் சாம்பியன் ,மேடைப் பேச்சாளர்,1960களிலேயே கையில் கேமராவுடன் திரிந்த நல்ல போட்டோகிராபார், என பன்முக திறமைகளை கொண்டு சாதனை படைத்தவர்.
என் கார்த்திதான் முதல் பேரன். அவனுடைய இழப்பு அவர்களை மிகவும் பாதிக்க நொறுங்கி போனவர்தான். வீட்டிலேயே முடங்கினார். [ என் தந்தையும் அதே போல்தான். தன சொந்த கிராமத்திற்கு சென்று முடங்கிப் போனார். அவரும் என்னைப் பிரிந்து இரண்டு வருடங்கள் . ]
உறவுகளின் எண்ணிக்கை குறையக் கூடாது. அதிகரிக்க வேண்டும். கார்த்திக், செந்தில் என ஒவ்வொருவராய் திருமணம் நடந்து, மருமகள்கள், பேரன் , பேத்திகள் என்று சொந்தங்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல், குறைவது எந்த விதத்தில் நியாயம்?
விரக்தி மேல் விரக்திதான் மிஞ்சுகிறது.
2 comments:
ஆண்டவனுக்கு பொறாமை, இத்தனை நல்லுள்ளம் கொண்டவரின் அன்பு எப்படி உனக்கு மட்டுமே கிடைப்பது, தனக்கும் கொஞ்சகாலம் வேண்டும் என்று எடுத்துக் கொண்டிருப்பான். உளியின் வலி பட்டால் தான் சிலை, வலியின் விலை சீக்கிரம் வரும்.
ஆருதலுடந் யாஸிர்.
Very sorry dear mom
Post a Comment