முல்லைப் பெரியார் அணை :
ஆச்சரியமாக , அதிசயமாகவும் இருக்கிறது. எனக்கு தெரிந்து தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது இந்த முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில்தான்.
என் உளமார்ந்த வாழ்த்துகள்.
என் பங்கிற்கு என்ன செய்யலாம் ?
அங்கு , அந்த மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் காய் கறிகள் ,மற்ற அனைத்து பொருட்களையும் உரிய விலையை விட அதிக விலை கொடுத்து வாங்குவதே என்னால் அவர்களுக்கு செய்யக் கூடிய ஆக்க பூர்வமான உதவி என்று நினைக்கிறேன்.
அந்த மாவட்ட வியாபாரிகள் சென்னையில் தனிக் கடை போட்டால் அவர்கள் கடையில் அதிக விலைக்கு வாங்கி அவர்களின் நஷ்டத்தை தவிர்க்க நான் ரெடி. நீங்க ரெடியா?
எல்லோரும் களத்தில் குதித்திருக்க ,வாய் மூடி வுடகார்ந்திருப்பவர்கள் சினிமாத் துறையினர்தான். அவர்கள் ஒரு அறிவிப்பு கூட இது வரை வெளியிடவில்லை.
கார்த்திக்+அம்மா
No comments:
Post a Comment