கொலைவெறி பாடல் '3 ' பாடல் வெளியீட்டு விழா முன்னோட்டத்தில் இருவர் வேட்டி உடுத்தி பாடிக் கொண்டிருந்தனர். நான் குழம்பிப் போனேன். ஏனென்றால் இருவரும் ஒரே போல் தோற்றம் கொண்டிருந்தனர். வயது வித்தியாசம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது. நான் நினைத்துக் கொண்டேன்.இருவரும் தனுஷ்தான் . இது ஏதோ கேமரா ட்ரிக் என்று. அப்புறம் நிகழச்சியை பார்த்த போதுதான் தெரிந்தது. அது அனிருத் என்று.
அப்படியே , அப்படியே ...கார்த்திக் ... 16, 17 வயதில் கார்த்திக்கை பார்த்தது போல் இருக்கிறார். கார்த்தி நிறம் சற்று குறைவு. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் மனதில் ஏக்கம் உண்டாகி விட்டது. பேசுவது கூட கார்த்திக் போலவே இருந்தது.
அனிருத் உனக்கு என் வாழ்த்துக்கள்.
கார்த்திக்+அம்மா