பெண் டாக்டர்கள் :
ஏதோ மருத்துவர்கள் எல்லாம் புனிதப் பிறவிகள் போல் அத்தனை போராட்டம் நடத்தினார்களே. அந்த பெண் மருத்துவர் ஒரு மயக்க மருந்து நிபுணர். அவருக்கு உரிய வேலையே அல்ல இது. அப்படியிருக்க ,அந்த தவறை பற்றி எதுவுமே பேசாமல் ,ஏதோ தாங்கள் அனைவரும் புனிதர் போல் காட்டிக் கொண்டு, எங்களாலும் போராட்டம் நடத்த முடியும், நாங்கள் போராட்டம் நடத்தினால் அவ்வளவுதான், மக்களே அழிந்து போய்விடுவீர்கள் என்று மிரட்டியிருக்கிறார்கள் அவ்வளவுதான்.
இப்போது ஒரு 20 நாட்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது. என் தோழியின் மகள் கர்ப்பம் தரித்துள்ளார். மாத விலக்கு தள்ளிப் போய் 10 நாட்கள்தான் ஆகியிருந்தது.அவர்கள் [ தாயும் மகளும் ] ஒரு பெண் மருத்துவரிடம் செக்கப்பிர்காக சென்றனர். எல்லா டெஸ்ட்டும் எடுத்த பிறகு அந்த டாக்டா சொன்னது என்ன தெரியுமா :
குழந்தையின் இதயம் துடிக்கவேயில்லை. அதனால் இந்த கருவை கலைத்து விடலாம் '' '' //
அதிர்ச்சியடைந்த தாயும் மகளும் ஒரே அழுகை. நான் சொன்னேன் '' '' என் சிற்றறிவிற்கு தெரிந்த அளவில் குழந்தை உருவாக்கி ௨0 நாட்களில் இதயம் உருவாகியிருப்பதோ, அல்லது அது இயங்க ஆரம்பிப்பதோ இயலாத விஷயம். எதற்கும் நீங்கள் வேறு ஒரு டாக்டரை பாருங்கள் என்றேன் அது போலவே அவர்கள் வேறு டாக்டரை பார்த்து, இப்போது நலமாக இருக்கின்றனர்.
மருத்துவர்கள் பற்றி பேசும்போது , விஜயகாந்த் ஒரு படத்தில், இறந்து விட்ட ஒரு நபரை வைத்து டாக்டர்களைப் பற்றி பேசுவாரே அதுதான் நினைவிற்கு வருகிறது.
வாழ்க கலி காலம்.
1 comment:
you are right. is that only doctors life is life? we lose many lives each day who can give protection for each individual.
Post a Comment