பகவத் கீதை :
இது ஒரு முட்டாள்தனமான கேள்வி என்று ஆத்திகர்கள் கோபப் படலாம்.
ஆனால் யாராவது இந்த கேள்விக்கு சரியான பதில் தாருங்கள்.
கேள்வி:
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று சொல்கிறார் கிருஷ்ணன் .
அப்படியானால், சுனாமியில் லட்சக் கணக்கானவர் இறந்தனரே ,அது நன்றாக நடந்ததா ? பெற்றவள் பிள்ளைகளை இழந்து, குழந்தைகள் பெற்றோரை இழந்து, உடமைகளை இழந்து சோகத்தில் பரிதவித்து நின்றனரே ,அது நன்றாக நடந்ததா?
ஒரு விமானத்தில் பயணித்த அனைவரும், இன்னும் சற்று நேரத்தில் ,நம் குடும்பத்தை பார்க்கப் போகிறோம், நம் தாய் நாட்டு மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற ஆனந்தத்தில் இருந்த போது விமானம் வெடித்து கரிக்கட்டையாயினரே அது நன்றாக நடந்ததா?
ஓடும் பேருந்தில் தீ பிடித்து அடையாளம் காண முடியாத அளவுக்கு பயணிகள் கருகிப் போயினரே , அது நன்றாக நடந்ததா?
இதை எல்லாம் எப்படி நியாயப் படுத்துகிறது இந்த மதம், ''இந்து மதம் ? ''
மீறிக் கேட்டால். முற்பிறவி, கர்மா என்று கதை சொல்வார்கள்.
வந்தவர்கள் எல்லாம் போக வேண்டியவர்கள்தான் , பிறந்தவர்கள் எல்லாம் இறப்பவர்கள்தான் என்றெல்லாம் உபதேசம் செய்வார்கள்.எல்லோரும் இறக்கப் போபவர்கள்தான். ஆனால் யார் ,எப்போது என்ற கேள்வி இருக்கிறதே.
அதையும், தாண்டி , கடவுளுக்கு நல்லவர்களை நிறைய பிடிக்கும், அதனால் இவர்களை சீக்கிரம் அழைத்துக் கொண்டார் என்பார்கள்.
அப்படியானால், உயிருடன் இருப்பவர்கள் அனைவரும் கெட்டவர்களா ?
என் கேள்விக்கென்ன பதில்?
கார்த்திக்+அம்மா
1 comment:
கேள்வியே புரியாதவர்களிடம் பதில் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் என நான் நினைக்கிறேன்.
Post a Comment