குமுதத்தில் ஞானி எழுதியதை படிக்க நேர்ந்தது. அவருடைய பெரும்பான்மையான கருத்துகளை ஆதரிக்கும் அதே நேரத்தில் அவரின் சில கருத்துகளை மறுக்கிறேன்.
பெண்ணை ஆணின் அடிமையாக இருக்கும் நோக்கிலேயே வளர்க்கப் பட்டார்கள் என்கிறார்.
கிடையவே கிடையாது.
பெண்ணின் உடல் அமைப்பு வித்தியாசமானது.தாய்மை பெண்ணிற்கு கொடுக்கப் பட்ட வரமோ சாபமோ தெரியாது.ஆனால் உடல் ரீதியாக அது அவளுக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஒரு ஆண் சிகரெட் குடிக்கலாம். பெண்ணுக்கு மட்டும் ஏன் கண்டிஷன் என்கிறார்.
ஒரு பெண் சிகரெட் பிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ அவளுக்கு பிறக்கும் குழந்தையை பாதிக்கும் என்பது ஞானிக்கு தெரியாதா?
தன குழந்தைக்கு பால் புகட்டும் சமத்தில் அந்த தாய்க்கு உணவு கட்டுப்பாடுகள் உண்டு. இல்லையென்றால் சிசு கஷ்டப்படும்.
மேலை நாட்டுப் பெண்களே [ மது சிகரெட்டில் அவர்களுக்கு எந்த கட்டுப் பாடும் இல்லை.] ஆனால் அவர்களே தாய்மை அடைந்திருக்கும் சமயத்தில் இந்த விஷயங்களை தவிர்க்கிறார்கள்.
பிறக்கும் குழந்தை எப்படி வேண்டுமானாலும் பிறக்கட்டும்.அடுத்த தலைமுறை எப்படி வேண்டுமானாலும் கஷ்டப் படட்டும் என்று நினைத்தால் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் குடிக்கட்டும்.
உடல் உறவில் ஆணுக்கு பாதிப்பில்லை. அவன் கை வீசி நடக்கிறான். பெண் சுமக்கிறாள்.
இதுதான் பிரச்சினையே.
அதனால்தான் அவளை பாதுக்காக்க வேண்டியுள்ளது.
அது அடிமைத்தனம் அல்ல.
குந்தி செய்த தவறால்தான் மகாபாரதமே.
கர்ணன்தான் மூத்தவன் என்ற உண்மை சொல்லப் பட்டிருந்தால் குருசேத்திர போரும் இல்லை. அத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அத்தனை லட்சம் மக்கள் உயிர் இழந்திருக்க வேண்டியது இல்லை. குந்தியின் தப்பான கர்ப்பம் நாட்டையே ஆட்டி வைத்தது.
அதுதான் விஷயமே.
ஞானியை விட நான் அறிவு குறைந்தவள்தான் .
தோன்றியதை எழுதினேன்.
கார்த்திக்+அம்மா

No comments:
Post a Comment