Super Star யார்?
எனக்கு சினிமா அறிவு மிகவும் குறைவு.2008 வரை நான் பார்த்த சினிமாக்கள் ஒரு 50 இருக்கலாம். நம்ப மாட்டீர்கள்.ஆனால் உண்மை அதுதான்.நேரம் இருந்ததில்லை.ஆர்வமும் இருந்ததில்லை. பெரிய குடும்பத்தில் நிறைய பொறுப்புகளுடன் இருந்ததால் சினிமா இரண்டாம் பட்சமாகியது.
நிறைய படிப்பேன்.எல்லா எழுத்தாளர்களையும் படிப்பேன்.
இப்போது இந்த கதை எதற்கு?
ரஜினி என்றால் கார்த்திக்கிற்கு மிகவும் பிடிக்கும்.
இப்போது அவர் படங்களை பார்க்கும் போது கார்த்தியின் தேர்வு சரி என்று உறுதியாகிறது.( கார்த்திக்கிற்கு பிடிக்கும் என்றால் ..எனக்கு..? அவரின் சிகரெட் ,குடி பழக்கம் அவர் மேல் எனக்கு ஒரு சிறு கசப்பை ஏற்படுத்தியுள்ளது.அதுவும் அல்லாமல் இன்னும் சில காரணங்கள் சொல்லலாம். ஆனால் வேண்டாம்.)
இப்போது பிரச்சினை என்னவென்றால் சில நடிகர்கள் தாங்கள்தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்வதுதான்.
ஒருவர் ஒரு வாரப் பத்திரிகையை குத்தகை எடுக்கிறார்.
இன்னொருவர் செய்ததுதான் amazing .ஒரு ஆங்கில தொலைக் காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக இரு முறை ஒளிபரப்பி கொடுமை படுத்தியதுதான்
இவ்வளவு வெறியா?
இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டுமா?
மக்கள் சொல்ல வேண்டும்.
நமக்கு நாமே பட்டம் சூட்டிக் கொள்ளக் கூடாது.
சினிமா உலகில் போட்டி நல்லதுதான்.அது நடிப்பில் மட்டுமே இருக்கட்டும்.

2 comments:
அவரவர் உணர வேண்டும்...
நானும் பார்த்தேன்.டைம்ஸ் நவ் டி,வி யில் .சூப்பர் ஸ்டார் சூர்யா என்று
Post a Comment