கார்த்தியின் ஆசிரியர்
என் 30 வருட காதலர்.
செந்திலின் ஆஸ்தான project guide = = அப்துல் கலாம் .
பின் வருவது :
அவருக்கு 16.08.2014 ல் அவருக்கு நான் அனுப்பிய மெய்ல் :
o apj
என் 30 வருட காதலர்.
செந்திலின் ஆஸ்தான project guide = = அப்துல் கலாம் .
பின் வருவது :
அவருக்கு 16.08.2014 ல் அவருக்கு நான் அனுப்பிய மெய்ல் :
o apj

மதிப்பிற்குரிய ஐயா ,
என் பெயர் கலாகார்த்திக்.இந்த மடலை முழுவதும் படியுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தாங்கள்
அன்னை இந்திரா காந்திக்கு அறிவியல் ஆலோசகராக இருந்த காலத்தில் இருந்தே
நான் உங்கள் பைத்தியம்.அமெரிக்கா தங்களை அழைத்த போது போக மறுத்து
இந்தியாவிற்கு பணி செய்த உங்கள் உறுதியைக் கண்டு தங்கள் மேல் கொண்ட காதல்
வெறியாகிப் போனது..எனக்கு 1980ம் ஆண்டு திருமணம் நடந்தது.
என் கணவரிடம் சொல்வேன்.
''உங்களுக்கு முன்பு நான் A P J வை பற்றி தெரிந்திருந்தால் அவரைத்தான் திருமணம் செய்து கொண்டிருப்பேன் '' என்று.
நான் +2 ஆங்கில ஆசிரியையாக பணியாற்றினேன்.அப்போது Railway reservation form நிரப்ப வேண்டிய பாடம் நடத்த வேண்டும்.
என் படிவம் இப்படித்தான் இருக்கும்.
1.A P J அப்துல்கலாம் .அறிவியலாளர் வயது 50
2.S .கார்த்திகேயன் .asst வயது 16
3.S .செந்தில்குமார் asst வயது 14.
என் பிறந்த நாளன்று மாணவர்களிடமிருந்து எந்த பரிசையும் ஏற்கமாட்டேன் என்று மாணவர்களுக்கு தெரியும்.
ஆனால் நான் மறுக்க முடியாத பரிசு ஒன்று உண்டு என்பதும் அவர்களுக்கு தெரியும்..அதுதான் தங்கள் புகைப் படம்.
''மிஸ் .உங்கள் lover உடைய புகைப்படம்'' என்று சொல்லி தருவார்கள்.
எனக்கு இரு மகன்கள். அவர்களும் என்னைப் போல் உங்கள் பைத்தியம்தான்.மூத்த மகன் ச .கார்த்திகேயன்.
அண்ணா
பல்கலை கிண்டி கல்லூரியில் 1998 ம் ஆண்டு சேர்ந்தான். 1999ல் நடந்த
அறிவியல் மாநாட்டிற்கு தாங்கள் வந்த போது தங்கள் பெயரை பதிவு செய்யும் போது
அவன் விரல்கள் கணினியில் நடனமாடிய வேகத்தைக் கண்டு தாங்கள் அதிசயித்து
பாராட்டியது அவனுக்கு கிடைத்த 100 கோடி ரூபாய் பரிசு.தன்னுடைய
பைத்தியத்திற்கு நாம் இப்படி ஒரு பாராட்டை தருகிறோம் என்பது தங்களுக்கு
புரிந்திருக்க வாய்ப்பில்லை.
அவன் 2002ல் 4ம் வருடம் படிக்கும் போது தாங்கள் அவனுக்கு பாடம் நடத்தினீர்கள்.என்ன ஒரு சந்தோசம்.
''ஏனப்பா லேட் '' என்று கேட்டால்
'அவர்தான்மா வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்'' என்பான்.
எங்களுக்கு அவர் என்றால் அது நீங்கள் மட்டுமே.அவனிடம் சொல்வேன்
''அவரிடம் ஒரு ப்யூன் வேலையாவது வாங்கி அவரிடம்தான் வேலை செய்ய வேண்டும்'
என்று.ஆனால் அதிர்ஷ்டம் இல்லையே.தாங்கள் ஜனாதிபதியாகி
விட்டீர்கள்.எல்லோரும் சந்தோஷப் பட்ட போது நாங்கள் மூவரும்
(நான்,கார்த்தி,என் இளைய மகன் செந்தில்குமார்) மட்டும் வேதனையில் நின்றோம்.
ஒரு Godfather ஐ இழந்த வலி.
என் இளைய மகன் செந்தில் Aeronautics படிப்பு எடுத்ததும்
உங்களால்தான்.தன project guide நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று
வெறியாக இருந்தான்.நீங்கள் டெல்லி சென்று விட்டீர்கள்.
'' ''
''இனி வருவதுதான் சோகத்திலும் சோகம்.என் அன்பு மகன் கார்த்தி 2005ம் ஆண்டு
ஒரு விபத்தில் இந்த உலகை விட்டு மறைந்து விட்டான்.'' '' ''
உங்களுக்கு இப்படி ஒரு ரசிகன் இருந்தது தங்களுக்கு தெரிய வேண்டுன் என்றுதான் இந்த மடலை நான் எழுதுகிறேன். வேறு எந்த சுயநலமும் இல்லை.2002ல் இதை எழுதியிருந்தால் எல்லோரும் போட்ட கோஷத்தில் சேர்ந்த 50 கோடி பேரில் நாங்களும் ஒருவராயிருந்திருப்போம்.
உங்களுக்கு இப்படி ஒரு ரசிகன் இருந்தது தங்களுக்கு தெரிய வேண்டுன் என்றுதான் இந்த மடலை நான் எழுதுகிறேன். வேறு எந்த சுயநலமும் இல்லை.2002ல் இதை எழுதியிருந்தால் எல்லோரும் போட்ட கோஷத்தில் சேர்ந்த 50 கோடி பேரில் நாங்களும் ஒருவராயிருந்திருப்போம்.
இல்லை.நாங்கள் உங்கள் பக்தர்கள்.
இல்லாமல்
போய்விட்ட என் கார்த்தி மகனின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும். நீங்கள்
அவனைப் பற்றி படித்து அவனை புரிந்து கொண்டீர்கள் என்றால்.
9 வருடங்கள் ஆகி விட்டன.அவன் என்னை விட்டு மறைந்து. இன்றும் அவன் பிரிவை தாங்க இயலாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு பேதை தாய்.
கலாகார்த்திக்
இதற்கு அவரிடம் இருந்து பதிலும் வந்தது.
அவரைப் பற்றி பிறகு இன்னும் எழுதுகிறேன்.
இன்றைய சோகத்திற்கு என்ன விடை?
பி.கு.
இன்று ஒரு 12 வயது சிறுவன் என் வீட்டிற்கு வந்தான். அவனிடம் செந்தில் கேட்டான்.
"இன்று பள்ளி இல்லையா ?''
அந்த சிறுவன் சொன்னான்
' ' யாரோ ஒருscientist இறந்து விட்டாராம் ''
செந்திலின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்
