About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/08/21

பௌர்ணமி .

மீள் பதிவு:
இன்னும் மனம் 2005 லேயே இருக்கிறது.
தேறும் வழி தெரியவில்லை.
மகன் ஏக்கம் உயிரை கொல்கிறது  Still living in 2005.
Today is 21st aug.
I+KARTHIK+SENTHIL WERE IN KARUR.
******    *****88
.//  //இன்று  பௌர்ணமி .
2005 Aug  20 ம் தேதி அன்றும் பௌர்ணமி.அன்று நான், கார்த்தி, செந்தில் மூவரும் Bangalore லிருந்து கரூர் நகருக்கு புறப்பட்டோம். கார்த்தியின்  நண்பருக்கு திருமணம். திங்கள்  அன்று திருமணம்..சனிக்கிழமை கிளம்பினோம்.இரவு 7 மணி.செந்தில் காரை ஓட்டி  வர நான் முன் சீட்டில் ..கார்த்தி பின் சீட்டில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.சாப்பிட்டு முடித்து கை கழுவ  கார் கதவை திறக்க நான் ''ஜாக்கிரதை கண்ணம்மா '' என்கிறேன்.'' ''ஆமாமாம்.பார்த்து ,பறந்து விடப் போகிறாய் ''  என்று (கார்த்தி ஒல்லியாய் இருப்பதை கேலி செய்து ) செந்தில் சொல்ல  பேச்சும்  சிரிப்புமாக வந்து கொண்டிருந்தோம்.அப்போது செந்தில் ''அம்மா இங்கு பாருங்கள். '' என்று முழு ,பிரகாசமான நிலவை காட்டினான். நான் ''இது என்ன பெரிய நிலா,  இதை விட அற்புதமான நிலா   பின் சீட்டில் இருக்கிறது.  என் கார்த்தி மகன் முகம்தான் என் பிரிய நிலா. அழகு நிலா '' என்று சொல்ல பின் சீட்டில் இருந்த கார்த்தி இரண்டு சீட்டிற்கு  நடுவில் தன முகத்தை நீட்ட அவனை கொஞ்சி உச்சி முகர்ந்து என் இரு கைகளில் அவன் முகத்தை ஏந்த , செந்தில் '' போதும் ,போதும் அம்மாவும்  மகனும் கொஞ்சியது '' என்று செல்லமாக கோபிக்க .சேலம்  சென்று என் அம்மா வீட்டில் தங்கி ,எல்லோருடனும்  அவ்வளவு சந்தோஷமாக  இருந்து விட்டு கரூர் சென்றோம்.
அந்த 3 நாட்களும் எவ்வளவு சந்தோஷமான  நாட்கள்.
சினிமாவில் வருமே .ஒரு பெரிய குடும்பம் .சந்தோஷமான,  பாசமான  குடும்பம் பாட்டு  பாடி ஆடி முடிக்கும் போது  வில்லன்கள் வந்து அவர்களை நாசப் படுத்துவார்களே.
அதே போல்தான்  என் வாழ்விலும்  நடந்து விட்டது.
கடைசி, கடைசி என்று கார்த்தி தன் உறவினர்கள்,  நண்பர்கள் என அனைவருடனும் சந்தோஷமாக இருந்தான்.கரூரிலிருந்து  திரும்பும் போதும் சேலம் சென்று தன்  பாட்டி  தாத்தா  மாமன்கள்  என எல்லோரையும் பார்த்து விட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்து விட்டு bangalore  சென்றோம்.
என் வாழ்வின் கடைசி சந்தோஷமான நாட்கள்.
இன்றும் முழு நிலவை பார்க்க தைரியம் இல்லாமல் பைத்தியமாக இருக்கிறேன்.
கார்த்திக் +அம்மா
KALAKARTHIK

2015/08/16

disclaimer :
i may be right or wrong :
பொன் குஞ்சு :
அதிசயம்
என் வீட்டருகே இருக்கும் மரத்தில் ஒரு காகம் கூடு கட்டி முட்டை வைத்திருந்தது.
அதை கவனித்துக் கொண்டிருந்தேன்.
முட்டையை உடைத்து குஞ்சு வெளியே வந்து கொண்டிருந்தது.
ஆச்சரியத்தின்  எல்லைக்கே சென்று விட்டேன். 
அந்த குட்டி காகம் அப்படி ஒரு தங்க (golden ) நிறத்தில் வெளி வந்தது.
அதனால்தான் காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு என்று சொன்னார்களோ?????????
நேற்று இரவிலிருந்து மழை.
தாய் காகம் கூட்டில் அமர்ந்து சிறகால் குட்டியை காத்து வருகிறது.
தாய்க்கு ஏதாவது ஆகி விடுமோ என்று கவலையாக இருக்கிறது.
உணவு வைத்தாலும் சாப்பிடுமா என்று தெரியவில்லை.
ஒரு குடையை கூட்டின் மேல் வைக்கலாமா என்ற யோசனையும் வந்தது.எப்படி என்று தெரியவில்லை.
காகம் அசையாமல் உட்கார்ந்து இருக்கிறது.
கவலையாக இருக்கிறது.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்