இது செய்தி :
இது செய்தியா ?????????
03:45:08
Saturday
2016-02-13
VIDEO : Jason Wu shows latest collection at New York Fashion Week
காடையாம்பட்டி:
மருத்துவ கல்லூரி முதல்வராக வேண்டும் என்பதற்காக, வீட்டில் நிர்வாண
பூஜையில் ஈடுபட்டதோடு, மனைவிக்கும் டார்ச்சர் கொடுத்ததாக தர்மபுரி
மருத்துவ கல்லூரி பேராசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.தர்மபுரி அரசு
மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அபிஷேக். (பெயர்
மாற்றப்பட்டுள்ளது). இவர், உடற்கூறு இயக்கவியல் துறைத்தலைவராக உள்ளார்.
இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் கடந்த 2 ஆண்டுக்கு முன், சேலம்
மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த, கணவனை இழந்த இளம்பெண்ணை இரண்டாவது
திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தன்னை கணவர் தாக்கியதாக
கூறி, ஓமலூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்கு
சேர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: எனது கணவர் வீட்டில்
நிர்வாண பூஜை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அது மட்டுமின்றி,
என்னையும் நிர்வாண பூஜையில் கலந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். நான்
ஒப்புக்கொள்ளாததால் தகராறில் ஈடுபட்டார். இதனால் எனது தாய் வீட்டுக்கு
சென்று விட்டேன். இந்நிலையில் திடீரென எனக்கு விவாகரத்து நோட்டீஸ்
அனுப்பினார். அதிர்ச்சியடைந்த நான், எனது தாய் மற்றும் பாட்டியை அழைத்து
கொண்டு தர்மபுரி சென்றேன். அப்போது, “என்னுடன் வாழ வேண்டும் என்றால்,
நீயும் நிர்வாண பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் வேறு
பெண்ணை திருமணம் செய்து கொள்வேன்” என கூறி, என்னை தாக்கினார்.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக
நிர்வாண பூஜை செய்து வருகிறார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க
உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அந்த பெண், தனது கணவர் நிர்வாணமாக
பூஜை செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டார். இதனால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
....... ................... ..................
கொடுமைடா இதெல்லாம்.
************
இவனெல்லாம் அறுவை ஆபரேஷன் செய்யும்போது என்ன செய்வார் .
கொடுமை.
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா.