மிரட்சி :
இந்த சிறுமிதான் இன்றைய கார்த்திக் அம்மா .
இதோ 58 வயது .
இன்னும் 3 மாதங்கள்.
பதவியிலிருந்து ,
பணியிலிருந்து ஓய்வு பெற்று வீட்டிற்கு வந்திருக்க வேண்டியது .கார்த்தி மகனின் நினைவு மட்டுமே போதும் என்று v .r .s பெற்று 11 வருடங்கள் ஓடி விட்டன.
58 வயது ஆன போதும் இன்னும் இந்த சிறுமியாகவே மனதளவில் இருக்கிறேன்.
பார்வையிலே கிழவியம்மா .
மனதினிலே ................
வாழ்வில் எத்தனை அடிகள்.
எத்தனை பேரிடிகள்.
எத்தனை சுனாமிகள்.
ஒவ்வொரு அடிக்கும் ,,இடிக்கும் இந்த மிரட்சியாக பார்வைதான்.
உலகம் இப்படியா?
உறவுகள் இப்படியா?
வாழ்க்கை இப்படியா?
என்று இந்த சிறுமி விக்கித்து நிற்கிறாள்.
திகைத்து நிற்கிறாள்.
பயந்து பார்க்கிறாள்.
பரிதவிக்கிறாள்.
படித்த படிப்போ,பணமோ,உறவோ எதுவும் பொருட்டில்லை.தெய்வமாய்,தாயாய்,உறுதுணையாய் ஆதரவாய் இருந்த அன்பு மகன் இல்லையென்றான பின் மருட்சி மட்டுமே.அடி வாங்கும் போதெல்லாம் இப்படி மருண்ட பார்வையுடன் உலகை எதிர் கொண்டு ,அவர்கள் எதிரில் கண்ணீர் வராமல் வீட்டிற்கு வந்தவுடன் கதறி கண்ணீர் மழையால் தன்னை நனைத்து கொள்ளும் இந்த சிறுமி.
இளம் பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார்?
எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்?
கார்த்தியால் மட்டுமே முடியும்.கார்த்தி வருவது சாத்தியமல்ல.
என் கண்ணீரும் கதறலும் நிற்பதும் சாத்தியமல்ல.
கார்த்திக் அம்மா
kalakarthik