About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/04/29

இப்படியும் ஒரு selfie : :2004
கார்த்திக்கும் அவன் நண்பரும் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது இருவரும் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.
எப்படி??????????
இருவர் மட்டுமே இருந்தனர்.
IDEA .....
எப்படி ??????
இப்படி.....
புரிகிறதா??????
இருவரும் கண்ணாடி முன் நின்று டார்ச் அடித்து தங்களை தாங்களே போட்டோ எடுத்துக் கொண்டனர்.
SUPER SELFI  தானே .
அப்போது இது போல் மொபைல் வசதி இல்லை.
கார்த்திக் கார்த்திக்தான்.
அன்புடன்
கார்த்திக் அம்மா

2017/04/19

மம்முட்டியான் கதை.:
மம்முட்டி என் உறவினர்.நான் பிறந்து வளர்ந்த மேச்சேரி எனும் கிராமம்.
அதனால் என் அண்ணா கோவை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும்போது அண்ணாவை மம்முட்டி என்றே அண்ணாவின் நண்பர்கள் அழைப்பர்.என்னையும் ''நம் மம்முட்டி sister ''என்றேதான் சொல்வர்.
மம்முட்டியான்ஒன்றும் பெரிய தீவிரவாதியா கொள்ளை கும்பல் தலைவனோ அல்ல.
அவரது அப்பா வயலில் தண்ணீர் பாய்சசிக் கொண்டிருக்கும் போது அவரின் சகோதரர்கள்
''  ''இன்று தண்ணீர் எங்கள் முறை. நீ எப்படி கட்டலாம்? ''
என்று வாய் சண்டையில் ஆரம்பித்தது.
கிராமத்து காரர்கள் அப்படித்தான்.
சட்டென்று வயலில் கிடைக்கும் ஆயுதம் மண்வெட்டியும் அரிவாளும்தான் .மம்முட்டியான்  தந்தையின்  சகோதரர்கள்  எடுத்தார்கள் மண்வெட்டியை.போட்டார்கள் ஒரு போடு..
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தந்தையை பார்க்க ஓடோடி வந்த மம்முட்டியானிடம் (இறக்கும் தருவாயில்)  என்னை வெட்டிய  இவர்களை அதே மண்வெட்டியால் நீ அடித்து கொல்ல வேண்டும் என்று சத்தியம்
(சினிமா காட்சி போல் உள்ளதா ) வாங்கிக் கொண்டு இறந்து விடுகிறார்.
அப்பாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக ஒரு நாள் இரவு தன தந்தையின் சகோதரர்களை துரத்தி துரத்தி மண்வெட்டியால் அடித்து கொன்றுவிடுகிறார்.
போலீசுக்கு பயந்து ஊரின் எல்லையில் இருக்கும் குன்றுகளில் தலைமறைவாக ஆகிறார்.
இது நிகழ்ந்த போ து நான் பிறக்க கூட இல்லை.
என் அம்மாவிற்கு கல்யாணமான புதிது.என் அப்பாவிற்கு தெரியாமல் ஓடி சென்று அந்த காட்சியை பார்த்து வந்தவர் ஒரு வாரம் காய்சலில் (fever ) பிதற்றிக் கொண்டிருந்தாராம்.
அப்பாவிடம் இருந்து செம டோஸ் .இந்த கதையை அம்மா சொல்லி சொல்லி சிரிப்பார்.(அதற்கப்புறம் அப்பா அம்மாவிடம் செம டோஸ் வாங்குவது தனி  கதை.).
கதை இத்துடன் முடியவில்லை.
நான் பிறந்தது 6 அல்லது 7ம் வகுப்பு படிக்கும்போது ஒரு வீட்டின் கதவில் ஒரு 5,6 குண்டுகள் பாய்ந்து போலீஸ் வந்து ஏக களேபரம்.
வந்தது மம்முட்டியாந்தான்.தப்பி விட்ட ஒரு உறவினரை கொல்ல வந்தான் என்று ஒரே பரபரப்பு.
வெகு வருடங்களாக எங்கள் சேலம் மாவட்டம் இந்த மாதிரி அடிதடிக்கு பிரபலம்.
ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது ரத்தம் சொட்ட சொட்ட கிராமத்தவர்கள்  எங்கள் வீட்டிற்கு வந்து நிற்பர்.இரண்டு கோஷுடியும் வந்து நிற்கும்.அப்பாவிற்கு பஞ்சாயத்து செய்வதே பெரிய வேலை.
ஆனால் இபோது படிப்பை அறிவு வந்து விட்ட பிறகு நிறைய மாறி விட்டார்கள்.
நன்று.நன்று
கார்த்திக் அம்மா

2017/04/18

இது செய்தி:
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 11 வயதே ஆன Agastya Jaiswal என்ற சிறுவன், கடந்த மாதம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினான். இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இந்த மாணவன் 63 சதவிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்றுள்ளான். இதன்மூலம் இளம் வயதில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவன் என்ற பெருமை Agastya Jaiswal-க்கு கிடைத்துள்ளது
என் கேள்வி என்ன என்றால் :
இந்த பையனுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைக்கிறது???????????????????
எல்லோருக்கும் இந்த வாய்ப்பை கொடுங்கள்.
இந்த பையன் புத்திசாலி என்றே ஒத்துக் கொள்வோம். ஆனால் இவனை தவிர வேறு யாருமே இதை செய்ய முடியாதா??????????
அதுவும் இந்த பையன் 63 % மட்டும்தான் பெற்றுள்ளான்.
....................
இதே போல் ஒரு பையன் 12 வயதில் M .B .B .S  பட்டம் பெற்றான் என்ற செய்தியும் படித்தேன்.
இதற்கு ஒரு தீர்வு வேண்டும்.
எல்லோருக்கும் சம வாய்ப்பு கொடுங்கள்.
கார்த்தியோ,செந்திலோ 3 மாதத்திற்கு ஒரு செமஸ்டர் என்று எழுத சொல்லியிருந்தால் 2 வருடத்தில் B .E படித்து முடித்திருப்பர்.
ஏன்  என் மாணவர்கள் பல பேரை நானே இந்த சாதனையை செய்ய வைத்திருப்பேன்....(உனக்கு பொறாமை.பாராட்ட தெரியவில்லை என்று காமெண்ட்ஸ் வரும்....)
அதல்ல  பிரசினை.
எல்லோருக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதுதான் என் ஆதங்கம்.
கார்த்திக் அம்மா  

2017/04/13

karthik my husband :
கார்த்திக்கை ஒரு நொடி மறப்பது என்பது முடியாத ஒரு விஷயம்.
அப்படி ஏதோ ஒரு செகண்ட் மறந்து விடுவேனோ என்று பயப் பட வேண்டிய அவசியமே இல்லை.
karthik my husband......office ல best employee of the year என்று விளம்பரம்.
அதை விட்டு ஒரு தொகுப்பாளர் '' ''நான் கார்த்திக் '' என்பார்.
அடுத்த சேனலில் சினிமாவில் ஹிரோ பெயர் கார்த்திக் ஆக இருக்கும்.
கார்த்தி என் கார்த்தி......
அம்மா 

2017/04/07

அரசியல்வாதிகளும்  அதிகாரிகளும்:
தலை கிறுகிறுக்கிறது.
என்ன சொல்வது.
கொள்ளையோ கொள்ளை  என்பது ஒரு புறம் இருக்க
இந்த அம்மாவுக்கும் இந்த மந்திரிக்கும் என்று கிளம்பும் அசிங்கங்களும் ;
what is happening????????
one group of people are enjoying the maximum with our money in dirty ways.
Where is morality??????????
It is said that Each ONE is having 1000 crores  .
And we ,the tax payers are spending each paise carefully to run our livelihood.
கார்த்திக் அம்மா