About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/04/18

இது செய்தி:
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 11 வயதே ஆன Agastya Jaiswal என்ற சிறுவன், கடந்த மாதம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினான். இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இந்த மாணவன் 63 சதவிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்றுள்ளான். இதன்மூலம் இளம் வயதில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவன் என்ற பெருமை Agastya Jaiswal-க்கு கிடைத்துள்ளது
என் கேள்வி என்ன என்றால் :
இந்த பையனுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைக்கிறது???????????????????
எல்லோருக்கும் இந்த வாய்ப்பை கொடுங்கள்.
இந்த பையன் புத்திசாலி என்றே ஒத்துக் கொள்வோம். ஆனால் இவனை தவிர வேறு யாருமே இதை செய்ய முடியாதா??????????
அதுவும் இந்த பையன் 63 % மட்டும்தான் பெற்றுள்ளான்.
....................
இதே போல் ஒரு பையன் 12 வயதில் M .B .B .S  பட்டம் பெற்றான் என்ற செய்தியும் படித்தேன்.
இதற்கு ஒரு தீர்வு வேண்டும்.
எல்லோருக்கும் சம வாய்ப்பு கொடுங்கள்.
கார்த்தியோ,செந்திலோ 3 மாதத்திற்கு ஒரு செமஸ்டர் என்று எழுத சொல்லியிருந்தால் 2 வருடத்தில் B .E படித்து முடித்திருப்பர்.
ஏன்  என் மாணவர்கள் பல பேரை நானே இந்த சாதனையை செய்ய வைத்திருப்பேன்....(உனக்கு பொறாமை.பாராட்ட தெரியவில்லை என்று காமெண்ட்ஸ் வரும்....)
அதல்ல  பிரசினை.
எல்லோருக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பதுதான் என் ஆதங்கம்.
கார்த்திக் அம்மா  

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மையான ஆதங்கம்... ஏனிந்த முரண் என்பது தான் புரியவில்லை...