About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/04/18

2000 ரூபாய்

2000 ரூபாய்
நம் போன்ற சாதாரண மக்கள் எப்போதும் ஒரு பயத்துடனும் திகிலோடும் தான் இருக்க வேண்டுமா ?
பெட்ரோல் , டீசல் விலை கண்ணை கட்டுகிறது.
ஒரு ஊருக்கு போனோமா  வந்தோமா என்றில்லை.
எந்த நேரத்தில் யார் சாலை மறியல் செய்வார்கள் என்று தெரியாது.
ஒரு இயல்பு வாழ்க்கை என்பது இல்லாமல் நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம்
.நம்மை சிலர் துரத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
 நம் வரிப் பணத்தில் ராஜ வாழ்க்கை வாழ்பவர்கள் நம்மை புழுவை பார்ப்பது போல் கேவலமாக பார்க்கிறார்கள்..நடத்துகிறார்கள்.
ஏதோ அவர்களுக்கு சொந்தமான உலகில் போனால் போகிறதென்று நம்மை வாழ அனுமதித்தது போல் இருக்கிறது அவர்கள் செயகைகள்.
ACT TO REPEAL சட்டம் வேண்டும்.
5 வருடம் அசைக்கவோ ஆட்டவோ முடியாது என்ற திமிர் அரசியல்வாதிகளுக்கு .
அவர்களை பலவகையில் சரிகட்டி அதிகாரிகள் செய்யும் அக்கிரமம் அதை விட.
உங்கள் பணம் எங்கள் கையில்.
கொடுத்தால் கொடுப்போம்.
மீண்டும் வரிசை.
ஒரு நாளைக்கு இவ்வளவுதான் உன் ரேஷன் .சத்தம் போடாமல் வாங்கிக் கொண்டு ஓடி போய்விடு.
இதுதான் யதார்த்தம்.
ஆங்கிலேயர் காலத்தில் கூட இத்தனை அடக்கு முறை இல்லை.
'' ''சுதந்திர இந்தியாவின் அடிமைகள்.''  ''
கொத்தடிமைகள்.
வாழ்க ஜனநாயகம்.

No comments: