About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/10/12

சங்கர் அகாடமி

சங்கர் அகாடமி யின்  சங்கர்.:
கோபம்.
கோபம்.
சங்கர் மீது எனக்கு அளவற்ற  கோபம்தான் வருகிறது.
இவ்வளவு பேரை உருவாக்கிய  ஒரு மாபெரும் மனிதர் அற்பமாக  குடும்ப பிரச்சினைக்காக  தற்கொலை செய்யலாமா?
என்னதான் பிரச்சினை இருக்கட்டுமே?
கணவனை  இழந்து இந்த மகனை உருவாக்க  அந்த தாய் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்க வேண்டும்.
இவரது பாட்டிதான் இவரை வளர்த்ததாக தெரிகிறது.
அந்த மூதாட்டியை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
இந்த இரு பெண்டிரும்  இவரை நம்பியே இருந்திருப்பர்.
இரு மகள்கள்.
அவர்களை நினைத்து பார்க்கவில்லையா இவர்?
இத்தனை மாணவர்களை ஊக்கப் படுத்தி சாதிக்க வைத்தவர் தன்  பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியவில்லையா?
இந்த குடும்ப பிரச்சினையை ஓரம் கட்டி விட்டு இன்னும் எத்தனையோ I .A .S மாணவர்களை  உருவாக்குவதில்  கவனம் செலுத்தியிருக்கலாம்.
என் கார்த்தி விபத்தில் மறைந்ததையே தாங்க முடியவில்லை.
இவர் தன தாய்க்கும் பாட்டிக்கும் மிக பெரிய துரோகம் செய்து விட்டார்.
தன் மாணவர்களுக்கும் துரோகம் செய்து விட்டார்.
சங்கர்,
கோபமான வருத்தத்துடன்
கார்த்திக் அம்மா

4 comments:

Jeevan said...

I feel same and sorry for this great man! He's our former house owner, and the house were we lived is now his official building in Adyar.

வருண் said...

கார்திக் அம்மா!

மற்றவர் பிரச்சினைகளைத் தீர்ப்பது எளிதுங்க. நம் குடும்பப் பிரச்சினையை, நம்மிடம் அன்பு செலுத்துபவர்களால் வரும் பிரச்சினையைத் தீர்ப்பதுதான் மிகவும் கஷ்டம். உலகை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஊருக்கு நல்லது செய்பவர்கள் எல்லாம் தன் பிரச்சினையை தீர்வு காண முடியாமல் பிறருக்கு உதவ முயல்கிறார்கள் என்பது விளங்கும். ஒரு சிலர் சாமியாராகவும் புத்தராகவும் ஞானியாகவும் போவதற்கு காரணம் தன் பிரச்சினையை தீர்க்க வழி தெரியாமல்தான்.

ஒவ்வொருவரும் பிரச்சினையும் நம்மை அந்நிலையில் பொருத்தி அதற்கு தீர்வு காண்பதும் சரினு சொல்ல முடியாது.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

வருண்

பிரச்சினை பெரிதாக உள்ளது போல் விஷயங்கள் கசிகின்றன .அவர் மனைவி மேல் தவறேதும் இல்லை என்பதும் தெரிகிறது.


Anonymous said...

its a different problem.Not a husband and wife issue.