About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/07/31

காஃபி டே சித்தார்த்

அதிர்ச்சி அல்ல .எரிச்சல்தான் வருகிறது .எவ்வளவு பெரிய சாம்ராஜ்யம் .எப்படிப் பட்ட சாதனை.
ஒரு நஷ்டம் ,ஒரு தோல்வி ,ஒரு கஷ்டம் வருமே.அப்படி இல்லாத வாழ்க்கை யாருக்கோதான் அமையும்.
வாழ்வில் வரும் கஷ்டங்களுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்வதாக இருந்தால் நானெல்லாம் எத்தனை முறை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் .
கடனுக்காக
நோய்க்காக
கணவரின் மறைவிற்காக
இதற்கெல்லாம் சிகரம் வைத்த என் உயிர் மகன் கார்த்தியின் இழப்பிற்காக
......இன்னும் எத்தனை சோதனைகள்.
வேதனைகள்.
சித்தார்த்
இன்று தைரிய மகள் முத்துலட்சுமி தினம் .ஒரு தேவ தாசி குலத்தில் பிறந்து ,
நோயில் வாடி
தாயை இழந்து
படிப்பில் தடங்கல்
சக மாணவர்களின் எதிர்ப்பு
இதையெல்லாம் தாண்டி இந்தியாவின் முதல் மருத்துவர் ஆகி ,
சட்டசபையில் 'நீ உன் குலத் தொழில் செய் 'என்ற மற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கு பதிலடி கொடுத்து
இன்று அடையாறு ஆல  மரம் போல் நிற்கும் கேன்சர் மருத்துவ மனையை நிறுவி .......
என்ன சித்தார்த்
இவ்வளவுதானா ??
கார்த்திக்
காஃபி டே கடைக்கு அடிமை.
ஒரு நாளுக்கு ஒரு டேஸ்ட் .ஒரு நாள் cool coffee .
ஒரு நாள் 4 அடுக்கு காஃபி .
ஒரு நாள் ராகி காஃபி .
நான் கார்த்தியை கிண்டல் செய்வேன் .
''இந்த ராகி மாவு நம் வீட்டிலேயே இருக்கிறது .நானே செய்து தருவேனே .இதற்கு எதற்கு 300 ரூபாய் ?''
அப்படி ஒரு 100 விதமான காஃபி தந்து சாதனை செய்த சித்தார்த்
இவ்வளவுதானா ?
பரிதாபம் வரவில்லை.
ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விட்ட சித்தார்த்
RIP .

No comments: