1970 என்று நினைக்கிறேன் .treasury strike நடந்தது . அரசு ஆசிரியர்களுக்கு அங்கிருந்துதான் சம்பளம் வர வேண்டும் .ஆனால் போராட்டம் .அரசு என்ன செய்தது .ஒரு தாலூக்காவிற்கு ஒருவரை பொறுப்பில் நியமித்து அவரிடம் பணத்தை கொடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் பிரித்து கொடுக்க சொல்லியது .இது போன்ற முக்கிய பொறுப்புகளை என் தந்தையிடம் தான் கொடுப்பார்கள் .அவர் அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்து விடுவார் .என் மேல் ,என் திறமை (????????????) மேல் அபார நம்பிக்கை .
அதே போல்தான் இந்த நிகழ்வின் போதும் .
SUITCASE :
சம்பள பணம் வந்தது .
ஒரு சூட்கேசில் .பெட்டி நிறைய புது நோட்டுகள் .+ஒரு லிஸ்ட் .எந்த எந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு எவ்வளவு தர வேண்டும் என்ற குறிப்பு .
....தந்தை அப்படியே அதை என்னிடம் கொடுத்து விட்டார்.
எல்லா தலைமை ஆரியர்களும் வந்தனர் .
அப்பா எங்கே என்று கேட்டனர் .நான்தான் பொறுப்பு என்றவுடன் தொகையை சொல்லி பெற்று சென்றனர் .
இந்த சிறுமியா என்று ஆச்சரிய பட்டு இருக்கலாம் .ஆனால் அவர்களுக்கு தெரியும் .அப்பாவின் செல்லப் பெண் .அவர் ஒருவரிடம் ஒரு பொறுப்பை கொடுக்கிறார் என்றால்
''இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து ...''
மிக சரியாக செய்து எல்லோர் பாராட்டையும் பெற்றேன்.
சொல்ல வந்த விஷயம் என்ன என்றால்
அவ்வளவு நிறைய பணம் {ஒரு சூட்கேஸ் நிறைய }பார்த்தும் மனதில் ஒரு சிறு சலனம் கூட வரவில்லை .
ஒரு சிறு ஆசை கூட வரவில்லை .
என்னை நினைத்து எனக்கே பெருமையாக இருக்கிறது.
...
அடுத்த சூட்கேஸ் :
இது 1996 ல் :
என் கணவரின் ஒரு கையெழுத்து ( விவரங்கள் வேண்டாம் ) போட்டால் ஒரு பெரிய deal முடியும் .அவரை சென்னைக்கு வர சொல்லி உத்தரவு .நாங்கள் மூவர் கூட்டணியும் {நான்+கார்த்தி+செந்தில் } காரில் தொற்றிக் கொண்டோம் .சென்னையில் ஒரு சூட்கேஸ் பணம் தருவதாக பேச்சு .கணவருக்கு என்னிடம் சொல்ல பயம் .இன்னொருவர் என்னிடம் இந்த விஷயத்தை தயங்கி தயங்கி சொன்னார்,
..யோசிக்க கூட இல்லை நான் .
(அந்த சூட்கேஸ் வாங்கினால் அவரை ..என் கணவரை ..வேறு கல்யாணம் செய்து கொள்ள சொல்லுங்கள் .நான் என் மகன்களை வளர்த்துக் கொள்கிறேன் )என்றேன் .....
என்னிடம் சொன்னவரின் mind voice ..அடடா நம்ம மனைவி இப்படி ஒரு சாய்ஸ் கொடுக்கலையே ....
ஆக இப்படித்தானே
நானும் சூட்கேஸும் .
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment