About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2020/03/23

கோரோனோ isolation

இப்போதுதான் தனிமைப் படுத்துதல் பற்றி பேசுகிறோம்.
நான் சிறுமியாக இருந்தபோது அம்மை நோய் வந்து விட்டால் அந்த வீட்டின் முன் வேப்பிலை தோரணம் கட்டி விடுவார்கள்.
அதை பார்த்தவுடன் அந்த வீட்டிற்கு யாரும் செல்ல மாட்டார்கள்.
அந்த வீட்டில் இருந்தும் யாரும் வெளியே செல்ல மாட்டார்கள்.
அந்த வீட்டில் நோய் சரியாகும் வரை துணி துவைக்க மாட்டார்கள்.
குப்பையை வெளியே கொட்ட மாட்டார்கள்.
அம்மை வந்தவரை தனியே படுக்க வைத்து தனி தட்டில் உணவு ,மோர் என்று கொடுப்பார்கள்.
முக்கியமாக கடுகு தாளிக்க மாட்டார்கள் .அக்கம் பக்க வீடுகளிலும் கடுகு தாளிக்க மாட்டார்கள்.(இதன் அறிவியல் உண்மை என்ன என்று தெரியவில்லை ).
ஒரு அண்டாவில்  வேப்பிலை போட்டு தண்ணீர் நிரப்பி வெய்யிலில் வைத்து பதமான சூட்டில் அம்மை வந்தவரை குளிக்க வைப்பார்கள்.
பிறகு வேப்பிலை,மஞ்சள் ,ஆமணக்கு சேர்த்து அரைத்த விழுதை உடம்பில் தேய்த்து விடுவர்.
ஊரிலேயே பெரியவர்கள் ஊர் முழுக்க மஞ்சள் நீராட்டுவார்கள்.
அதற்கப்புறம்தான் தடுப்பு மருந்து கண்டு பிடித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
இன்றும் கூட என் வீட்டில் வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்து மாதம் ஒரு முறையாவது புகை போடுவேன்.
அதையேதான்  ஹோமம் என்று வியாபாரமாக்கி விட்டார்கள்.
ஆனால் நேற்று நடந்த கொடுமை சொல்லி மாள முடியாது.
காலை 4 மணிக்கு இறைச்சி கடை ,பால் கடை என்று கூடிய கூட்டமும்,ஒருவர் மேல் ஒருவர் விழுந்து பிராண்டி கொண்டதும் ...திருந்தவே மாட்டார்கள்.
5 மணிக்கு நடந்த கொடுமை ...உச்சம் ....அபார்ட்மெண்டில் இருந்து எல்லாரும் ஒன்று கூடி ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு (கை  தட்ட சொன்னால் )பாத்திரம் தட்டிக் கொண்டிருந்த கண் கொள்ளா காட்சி ???????????
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வர வேண்டாம் என்று சொன்னால் வந்து கை தட்டிய முதியோர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.அதற்கப்புறம் குழந்தைகள்.....அவர்களை கூட்டி வந்து கை தட்ட வைத்து பெருமை பட்டு கொண்ட பெற்றோர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
ஆக நேற்று நடந்த isolation எந்த அளவு வெற்றி தந்தது என்பது கேள்விக்கு குறி.
HIGHLIGHT :
கடவுள்கள் ISOLATE செய்து கொண்டதுதான்.
கடவுள்களுக்கே இந்த பக்த கோடிகளை பார்த்து பயம் வந்து விட்டதோ ,அல்லது இவர்களின் அளப்பறைகளை பார்த்து எரிச்சலாகி விட்டாரோ கதவை சாத்திக் கொண்டாரோ?????விஜய் சேதுபதி சொன்னது சரியோ??

2020/03/17

சேதுபதி மதம்

என் அறிவு கம்மிதான்.
ஆனால் என் சிறிய அறிவிற்கு எட்டிய அளவில் எந்த மதத்திலும் மனிதன் கடவுளை காப்பாற்றுவதாக சொல்லவில்லை .கடவுள்தான் மனிதனை காப்பாற்றுவதாக எல்லா மதங்களும் சொல்கின்றன.
நடிகருக்கு தெரிந்தது எனக்கு தெரியவில்லை.
மனிதம்தான் உயர்ந்தது என்று மட்டும் சொல்லியிருக்கலாம்.
சக மனிதனை நம்பு என்று மட்டும் சொல்லி இருக்கலாம்.
இதில் மதத்தையோ, கடவுளையோ இழுக்க வேண்டிய அவசியம் என்ன ??

சத்துணவு

பெத்தவங்க :
31ம் தேதி வரைக்கும் எல்லாம் closed .பால்வாடி எனப்படும் அங்கன்வாடிக்கும் தடை.
ஆனால் அரசு என்ன சொல்கிறது என்றால் இந்த 15 நாட்களுக்கும் அந்த மாணவர்களுக்கு உண்டான உணவை தயாரித்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் ....
டி .வி யில் பார்க்கிறேன் அரிசி,பருப்பு etc எல்லாம் ஒரு பையில் போட்டு கொடுக்கிறார் ஒரு பெண்.
அதை ஒரு தாயார் பெற்று செல்கிறார்.
என் கேள்வி :ஒரு 15 நாட்களுக்குகூட நான் என் குழந்தைக்கு உணவு தர மாட்டேன் ..... நான் பெற்ற குழந்தைக்கு அரசுதான் உணவு தர வேண்டும் என்றால் உங்களுக்கு வெட்கமாக இல்லை?
அப்புறம் எதற்கு ???????????
 

2020/03/16

கும்பிடுங்கள்

நம் நாட்டு பழக்க வழக்கங்கள்தான் சிறப்பு சிறப்பு சிறப்பு :
நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் கை  கூப்பி வணக்கம் சொல்வோம் .
......இன்று உலகமே அந்த பழக்கத்திற்கு மாறி விட்டது .
....வெளியிலோ ,வேறு ஊருக்கோ சென்று வந்தால் வாசலிலேயே தண்ணீர் கொண்டு கை ,கால்களை  சுத்தமாக சுத்தம் செய்து கொண்டுதான் வீட்டிற்குள்ளேயே நுழைவர் .
இன்று உலகமே அந்த பழக்கத்திற்கு மாறி விட்டது .
எனது பாட்டிகள் அவர்கள் வீட்டில் இருந்து எங்கள் வீட்டிற்கு வந்தால் ...
தயிர் அல்லது மோர் தலையில் தேய்த்து  கொள்வர் .
சிறுமியான எனக்கு அது ஆச்சரியத்தை கொடுத்தது.
ஐயே ,இதை போய் தலையில் தேய்க்கிறார்களே என்றும் இருக்கும்.
ஆனால் அதெல்லாம் எவ்வளவு சரி என்று இப்போது புரிகிறது.
கார்த்திக் அம்மா