அரசு 7 லட்சம் நிதி ..
இது நிதி அல்ல அநீதி .
அரசு என் மீது கோபம் வேண்டாம் .
இந்த அரியலூர் மாணவன் நீட்டிற்கு தயாராகி வந்தான் .தோல்வி பயத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான் என்கிறார்கள் .
( // என் பழைய பதிவு ஒன்றில் இப்படித்தான் சுஷாந்த் தற்கொலை பற்றி பாவம் என்று ஒரு பதிவிட இப்போது அவர் பற்றி வரும் செய்திகளை படிக்கும் போது வேதனையாக இருக்கிறது .//)
அதே போல் இந்த மாணவன் தற்கொலை பற்றி ஆராய வேண்டும் .
சரி, அப்படியே அவன் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டால் அதை ஏன் நியாய படுத்த வேண்டும் ?இந்த தேர்வை எதிர் கொள்ள முடியாத இவன் மருத்துவ தேர்வுகளை எப்படி எழுதுவான் ?
அதென்ன படித்தால் M .B .B .S மட்டுமே படிக்க வேண்டும்?
மற்ற படிப்புகளை படித்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாதா ?
யார் கிளப்பி விட்டார்கள் இந்த தப்பை ?
Flashback :நான் என் மாணவர்களிடம் கேட்பேன் ''நீங்கள் மேற்படிப்பு என்ன படிக்க விரும்புகிறீர்கள் ? ''
பல மாணவர்கள் M .B .B .S என்றுதான் சொல்வார்கள் .ஏனென்றால் அப்போதுதான் நிறைய சம்பாதிக்க முடியும் என்பது .
எத்தனைடாக்டர்கள் அப்படி 1001 கோடி சம்பாத்தித்து விட்டார்கள்?
நான் சொல்வேன், நீ 100 கோடி சம்பாதித்து 500அடி bedroom ல் 100 அடி படுக்கையில் படுத்தாலும் உன் உயரத்திற்கும் அகலத்துக்கும் மட்டும்தான் படுக்க முடியும்....அப்போதும் நிம்மதியான தூக்கம் வர வேண்டும் ...
மருத்துவர்கள் மட்டுமே அறிவாளிகள் என்ற எண்ணத்தை வேறு உருவாக்கி வைத்துள்ளார்கள்.
நானும் மருத்துவம் படிக்க ஆசை பட்டேன் .போதிய மார்க் இருந்தாலும் பெண்பிள்ளை என்பதால் தந்தை ஆர்வம் காட்டவில்லை .நான் சாதிக்கவில்லையா ?
NEXT :அரசு அறிவிக்கும் நிதி ./ இப்படியே எல்லா மாணவர்களுக்கும் நிதி தந்தால் மாணவர்கள் தற்கொலை தொடரும் .
23 அரியர்ஸ் எல்லாம் என்ன செய்யும்? இது ஒரு தப்பு.மாணவர்கள் படிக்க உதவலாம் .அவனுக்கு ஸ்பெஷல் கோச்சிங் தரலாம் .அதை மீறி அவன் பெயில் என்றால் அது அவன் தப்பு .அந்த படிப்பை விட்டு அவனால் முடிந்த படிப்பை படிக்க வேண்டும்.
No comments:
Post a Comment