கார்த்தி கௌன்சலிங் கதை .
கார்த்தி எண்ட்ரன்ஸ் தேர்வில் மாநில அளவில் 23 வது ரேங்க் .( எந்த கோச்சிங் வகுப்புகளுக்கும் செல்லாமல் அவனே படித்து அந்த ரேங்க் வாங்கியதால் எல்லோரும் அவனை கொண்டாட )
அவன் என் அம்மா வீட்டின் 3ம் தலைமுறை முதல் மகன் .செல்லமோ செல்லம் .அவன் கௌன்சலிங்கிற்கு
நாங்கள் நால்வர்,
என் அப்பா ,
அம்மா ,
என் மாமனார் ,
கார்த்தியின் பெரியப்பா ,
அவரது இரு மகன்கள்
,என் கணவரின் நண்பர் என எல்லோரும் வரிசை கட்டி நிற்க
பல்கலைக்குள் நுழைந்தால் ஏதோ கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்து விட்டோமோ என்ற சந்தேகம் வந்து விட்டது ..(கார்த்தி முதல் நாள் , முதல் பேட்ச் ) அந்த மாணவர்களுக்கு ஸ்பெஷல் வரவேற்பு .நாதஸ்வர மேளம் முழங்க கல்யாண வரவேற்பு
.ஒரே திகைப்பு, பெருமை ,சந்தோசம் .
டி .வி கவரேஜ் வேறு .நானும் என் அம்மாவும் அமர்ந்திருக்க , படம் பிடிக்க ,ஒரே அமர்க்களம் .அது வரை பக்கத்தில் உட்கார்ந்திருந்த செந்தில் அப்போதுதான் தாத்தாவிடம் போய் அவரை கலாய்த்து கொண்டிருந்தான்.வந்து பார்த்தால் டி .வி வேறு பக்கம் போய் விட்டது.
அடுத்த நாள் பள்ளிக்கு வந்தால் ஒரே கோரஸாக '' ''நாங்கள் உங்களை டி .வி யில் பார்த்தோமே '' '' என்று ஆசிரியைகள் உற்சாக பாடல் .
வாழ்க்கை எவ்வளவு இனிமையாக , சந்தோஷமாக இருந்தது .
காட்ச்சிகள் மாற, செந்தில் +2 படிக்கும் போது அவன் தந்தை இறந்து விட குடும்பம் சோகத்தில் மூழ்கி விட ,செந்திலின் கௌன்சலிங் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவா வேண்டும் ?
2 comments:
வேதனை...
சோதனை மேல் சோதனை....
Post a Comment