About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/03/14

இலவசம்+ குடும்ப தலைவன்

   ஆரம்பித்ததோ எந்த அரசு ஆரம்பித்ததோ இந்த இலவசம் என்ற ஒரு தீராத ஒரு  நோய் .

 எல்லாம் இலவசம்.குழந்தை கருவில் உருவான நாளில்  இருந்து சத்துணவு ,இலவச பிரசவம் ,பால்,தொட்டில் என்று ஆரம்பித்து படிப்பு முடியும் வரை இலவசம்.

பிரசினை என்ன என்பதை புரிந்து கொள்ளவில்லை.ஆண்மகன் தன பெருமையை,குடும்ப தலைவன் ,கணவன் ,தந்தை என்ற அத்தனை பெருமைகளில் இருந்தும் ,பொறுப்புகளில் இருந்தும் ஒதுக்க படுகிறான்.

'' அப்பா,எனக்கு பேனா வாங்கி தருகிறாயா '' என்ற மகளின் கொஞ்சலான வேண்டுகோள் இல்லை.

அப்பா எனக்கு சைக்கிள் வாங்கி தருகிறாய் என்று மகனிடம் இருந்து அன்பு கட்டளை இல்லை.

மாறாக ''நீ யார் ?உன்னிடம் நான் என்ன கேட்க வேண்டும் '' என்ற விட்டேத்தி குணம் வளர்கிறது.

மனக் குமுறல் ஆரம்பிக்கிறது.

it  leads to depression .

குடும்பம் பின்னி பிருகும் பந்தத்தை இழக்கிறது.

அப்படியானால் ஏழை மக்கள் கஷ்ட பட வேண்டுமா .இல்லை ...

நிசசயமாக இல்லை.

அவர்களை ஏழைகளாகவே வைத்திருக்காதீர்கள் .

அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துங்கள்.

வேலை கொடுங்கள்.

சம்பளம் அதிகம் கொடுங்கள்.

அவர்களுக்கு வேண்டியதை அவர்களே வாங்கிக் கொள்ளும் வசதியை செய்து தாருங்கள்.

தொழிற்சாலை கட்டுங்கள்.

விவசாயத்தை விரிவு படுத்துங்கள்.

இலவசம் கொடுத்து அவர்களை அவமானப் படுத்துவதை நிறுத்துங்கள்.

அது எந்த அரசாக இருந்தாலும் சரிதான்.


1 comment:

Jeevan said...

மிக சரி. வாய்ப்புகளை உருவாக்கினால் அவர்களே வளர்ந்த நிலைக்கு வந்துடுவர்