எல்லோரும் ஜனநாயக கடமை ஆற்றி யாகி விட்டிர்களா .
நான் காஃபி மட்டும்தான் ஆற்றினேன்.
வோட் போட்டிர்களா என்று சொல்லலாம்.என்ன ஜனநாயக கடமை?
வர வர கடு கடு தமிழ் .சனாதன தர்மம்..என்பது போல் பல தமிழ் சொற்கள்..ஆக தமிழ் நாட்டில் தமிழும் தெரியவில்லை.ஆங்கிலமும் தெரியவில்லை .இதுல இந்தி படி என்ற காமெடி வேறு.
ஒரு புலி இதோ பாரு நான் வர்றேன் பாரு என்று கேட்டை திறந்த நேரத்தில் இருந்து கேமரா பக்காவா செட் செய்து வந்து சீறி விட்டு மேலே இருந்து வந்த காற்றில் அசைந்த இலையை பார்த்தவுடன் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து அங்க பிரதட்சணம் செய்து அப்படி எல்லாம் இல்லங்கன்னா என்று வாலை சுருட்டி கக்கத்தில் வச்சுட்டு போய் ஒளிஞ்சுக்கிச்சு .
அட நாட்ல நடிகர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா .இவர் வந்தார்.அவர் வந்தார்.என்று நாள் முழுக்க அந்த முகங்களையே பார்க்க வைத்தார்கள்.
யாரோ '' வேசி ஊடகங்கள் '' என்று சொன்னது நினைவிற்கு வந்து போனது.
....கொரோனா காலத்தில் குழந்தைகளை வெளியே கொண்டு வராதீர்கள் என்று உலகமே அலறிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பாச மிகு தாத்தா தன் பேரனுடன் வந்து ''ஜனநாயக கடமை ''ஆற்றி '' விட்டு சென்றார்.
இவன்தான் பணம் கொடுத்தான் என்று A சொல்ல இல்லை இல்லை இவன்தான் கொடுத்தான் B சொல்லி உத்தமர்கள் ஆகிக் கொண்டிருந்தார்கள்.
அம்மியில் அரைத்து,டான்ஸ் ஆடி, ''பூ வைத்து விட்டு '' துணி துவைத்து ETC நாடகங்களை நடத்தி மக்களை வாழ வைக்கவே இதையெல்லாம் செய்கிறோம் என்று டன் டன்னாக பூ சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
ஆஹா இந்த தொகுதியில் குப்பை கூட அள்ளவில்லை .10 வருடமாக இந்த தொகுதி M .L .A என்ன செய்தார் என்று எம் .எல்.ஏ வை பக்கத்தில் வைத்துக் கொண்டே முழங்கினார் ஒரு அம்மணி.
இன்னொரு தேவதை ஜி எல்லா பேய்களுக்கும் சேவை செய்திருக்கிறார் என்று மக்களை எல்லாம் பேய்களாக்கி விட்டு சென்றார்.
ஒரு வழியாக எல்லா DRAMAA வும் முடிந்து விட்டது.
காமெடி போதும்.''வேதனையான விஷயம் ''
கழுதை மேல் EVM எல்லாம் ஏற்றி கொண்டு போகும் காட்சியை பார்த்த போது மனம் மிக மிக வேதனை பட்டது .
சுதந்திரம் வாங்கி 73 வருடங்கள் ஆகி விட்டது.இன்னும் அந்த மக்களுக்கு ஒரு சாலை வசதி கூட செய்து தரவில்லை என்பது எவ்வளவு அவலமான அவமானமான விஷயம்.
8 வழி சாலை, 8000 கோடி விமானம் , 3000 கோடி சிலை .....
2024ல் எல்லோருக்கும் rest room என்று சொல்லும் போது ஒரே ஒரு நொடி மனம் இடித்துரைக்காதா .
போதும் புலம்பல்.
BYE
4 comments:
வேதனை...
அக்கா நலமா இருக்கீங்களா .ஜனநாயக கடமை ..நீங்க காஃபி ஆத்தினிங்க நான் பச்சை தேநீர் ஆற்றி குடிச்சேன் :)அந்த புளியை :) நானும் 50 இன்ச் ஸ்மார்ட் டிவில பார்த்து தொலைச்சேன் அது மட்டுமில்ல எல்லா அலப்பறைகளையும் பொதுமக்கள் மாஸ்க் கூட போடாம செல்பிக்கு அலைந்த அலைச்சலையும்தான் .//பேய்கள் /// அவ்வ்வ் என்னுடைய அடுத்த பதிவில் ஓரிரு வார்த்தை எழுதினேன் அதையே நீங்களும் இங்கே குறிப்பிட்டிருக்கிங்க :)))))சேம் பின்ச் :))) உண்மையில் இந்த காமெடியை நேரில் கண்ணால் பார்க்காதது நல்லதுதான் .நல்லா துவைத்து அலசி பிழிஞ்சிருக்கீங்க .நம் மக்கள் இன்னும் ஜிகினா மேக்கப் பின்னால் தான போறாங்க அவங்களை சொல்லி குற்றமில்ல அரசியல்வாதிகளே மேக்கப்பை நம்பித்தானே இருக்காங்க
அன்பு ஏன்ஜெல் உங்களிடம் இருந்து ''ங்கே'' வை பார்த்து அடடா இதை நிறைய நாளாக மறந்து விட்டோமே என்று என் முந்தைய போஸ்ட்டில் use செய்திருந்தேன் பார்த்திங்களா .
என்னுடைய எண்ணங்களையே உங்கள் பதிவிலும் சொல்லி இருப்பதாக சேம் பின்ச் சொல்லி இருந்திர்கள் .
ஹ்க்கும் ஹ்ம் GREAT MINDS THINK ALIKE ஹா ஹா .
ஐயோ இருங்க வீட்டு மேல 10, 15 கல் விழற சத்தம் கேக்குது .
என்னன்னு பாத்துட்டு வரேன்
கஞ்சமாக இருப்பதே தப்பு .அதிலும் வடி வடி கட்டிய கஞ்சன் .தப்பு.தப்பு.
வலை சித்தர் , ,இன்னும் ஒரு வார்த்தை சேர்த்து கமெண்டில் எழுதினால் உங்கள் முப்பாட்டன் வள்ளுவன் சொத்து குறைந்து விடுமோ ??
ஓ ,'' குறுக சொல்லி விளங்க வைக்கும் குறளை அக்கு வேறாக ஆணி வேறாக அலசுபவர் அல்லவா ''
அதுதான்.
நன்றி நண்பரே
Post a Comment