மாலை 5.25 நிமிடத்திற்கு வானில் சூரியன் ரத்த சிகப்பு நிறத்தில் அமர்க்கள படுத்துகிறார்.
பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.
வானில்தான் எத்தனை ஜாலங்கள் .நமக்குத்தான் ரசிக்க நேரமும் இல்லை .பொறுமையும் இல்லை
I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
மாலை 5.25 நிமிடத்திற்கு வானில் சூரியன் ரத்த சிகப்பு நிறத்தில் அமர்க்கள படுத்துகிறார்.
பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.
வானில்தான் எத்தனை ஜாலங்கள் .நமக்குத்தான் ரசிக்க நேரமும் இல்லை .பொறுமையும் இல்லை
எலி தின்ற குட்கா /
உ .பி மாநிலத்தில் போலீசார் 500 கிலோ குட்காவை பிடித்துள்ளனர்.
அந்த கேஸ் நீதிமன்றத்திற்கு வந்த போது நீதிபதிகள் ''அந்த குட்கா எங்கே '' என கேட்க ''MY LORD அத்தனையையும் எலிகள் சாப்பிட்டு விட்டன ''என்று பதில் கொடுத்துள்ளார்கள்.
5 கிராம் போதை பொருளை மனிதன் தின்றாலே out .இவ்வளவு குட்காவையும் எத்தனை எலிகள் சாப்பிட்டன ???????????
அவைகளுக்கு ஒன்றுமே ஆகவில்லையா??????
இவர்கள் அந்த எலிகளை பிடிக்க முயற்சி செய்யவில்லையா??
ஒரு எலியை மட்டுமாவது பிடித்து FIR போட்டு நீதிபதியின் முன் நிறுத்தி இருக்கலாம்....
எலியை தொட்டால் எலி காய்சசல் வந்து விடும் என்று பயந்து விட்டார்களோ ?????????
போலீசின் இந்த பதிலுக்கு என்ன பேர் வைக்கலாம் ????
திமிர்,தெனாவெட்டு ,???????????
ஏதாவது புது வார்த்தை கண்டுபிடிக்க வேண்டும்.
ஒன்று மட்டும் உண்மை.
'' இந்தியா ஒளிர்கிறது'''
கொடுமையிலும் கொடுமை இந்த இளம்பெண்ணின் முடிவு.
என்ன மாதிரி விளையாடுகிறாள். நடனம் ஆடுகிறாள்.
இறப்பிற்கு முன்னாள் status வைக்கிறாள்.(அப்போதே அவள் கால் எடுக்க பட்டுள்ளது.)
ஆனால் நம்பிக்கை.தைரியம்.
அவ்வளவு வலி.
கதறி இருக்கிறாள்.
மயக்க மருந்து கொடுத்து கொடுத்து நேரத்தை கடத்துகிறார்கள்.
' என்னால் முடியவில்லை. வீட்டிற்கு கூட்டி போங்கள் ''என்கிறாள்.
அடுத்த நாள் ''அவள்'' என்பது ''அது''வாகி விட்டது.
திக்கென்றாகி விட்டது. இரவில் கெட்ட கெட்ட கனவுகள்.
இதயம் கண்ணா பின்னாவென்று துடிக்கிறது.
இறப்பு கொடிது .
ஆனால் இவ்வளவு வலி.இவ்வளவு கொடுமை அனுபவித்தா இறக்க வேண்டும்?
மனது வலிக்கிறது .
இனி என்ன செய்து என்ன ஆகும்.
வெறுமை. கண்ணீர் .
1990 களில் மருத்துவ மனைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஒரு குழு இருந்தது.
நானும் அந்த குழுவில் இருந்தேன்.
மருத்துவ மனையில் இருக்கும் நோயாளிகளை சந்தித்து குறை கேட்பது,மருந்துகளின் இருப்பை செக் செய்வது என்றெல்லாம் முடித்து விட்டு மருத்துவர்களுடன் கலந்துரையாடல் செய்து குறைகளை நிவர்த்தி செய்வோம்.
இது கதையல்ல.உண்மை.
இப்போது நடைமுறை என்ன என்று தெரியவில்லை.
ஒரு சின்ன கண்காணிப்பு அவசியம் .
ராமனும் சீதையும் :
சீதையை ராவணனின் அசோக வனத்தில் இருந்து மீட்ட ராமன் அயோத்திக்கு அழைத்து வந்து அரசராக ஆட்சி நடத்துகிறார். சிறப்பான ஆட்சி செய்கிறோமா மக்களின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ள இரவில் மாறுவேடம் அணிந்து நகர் உலா வருகிறார்.
அப்போது ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் பேசி கொள்வதை மறைந்திருந்து கேட்கிறார்.
அவர்கள் பேசி கொள்வது :'' சீதை இத்தனை நாட்கள் வேறு ஒரு ஆண்மகன் வீட்டில் இருந்திருக்கிறாள்.அவள் உத்தமிதானா? பத்தினிதானா?'' என்ற கோணத்தில் போகிறது பேச்சு.
அடுத்த நாள் அரசவையை கூட்டிய ராமன் சீதையை நாடு கடத்துகிறான்.
ஒரு நல்லவனாக , ,நல்ல கணவனாக இருந்திருந்தால்
'' என் மனைவியை பற்றி எனக்கு தெரியும்.அவள் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது '' ''என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும் .
அதிலும் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் .''பேசி கொண்ட தம்பதி தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்களாம் . ''
அற்புதம்.ஆணாதிக்கம்.ஆணவம்.
தான் உத்தமன் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்ற மமதை.
ராமனை தெய்வமாக கொண்டாடுவோம்.
சூர சம்ஹாரம் :
டி .வி க்களின் புண்ணியத்தால் தமிழக மக்கள் அனைவரும் பரலோக பிராப்தி அடைந்து விட்டனர்.
ஒரே சேனல் விடாமல் எல்லா சேனல்களும் சூர சம்ஹார நிகழ்சசியை நேரடி ஒளி பரப்பு செய்தன.
'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்'.
சூரன் கெட்டவன் .அரக்கன்.
எல்லாம் சரி .
அப்படிப்பட்ட நல்ல கடவுள் அந்த அரக்கனை திருத்தி மனம் மாற்றி எல்லோருக்கும் நல்லது செய்யும் ஒரு நல்லவனாக மாற்றி இருக்கலாமே.
தன் தவறை உணர்ந்த சூரன் 'என்னை ஆட்கொள்ளுங்கள் ' என்று கேட்டவுடன் சேவலாக மாற்றி தன் கொடியில் வைத்து கொண்டாராம்.
கொஞ்சமா கதை சொல்லுங்கடா .
முருகன் வேல் எடுத்து வருகிறார்.சூரன் ஆடியபடி வருகிறார்.வேல் பட்டவுடன் ஒருவர் அந்த தலையை எடுத்து விடுகிறார்.
கேட்டால் நல்லவர்களை காப்பாற்ற இறைவன் எந்த எல்லைக்கும் செல்வார் என்று நியாய படுத்துகிறார்கள்..
எத்தனை கதைகள்?????
இன்னொரு கதை.
யாரோ ஒருவனை கொல்ல ஒரு கடவுள் மோஹினி வடிவம் எடுக்கிறார்.மோகினியின் அழகில் மயங்கிய இன்னொரு கடவுள் அவரை ஒரு புதருக்குள் வைத்து கற்பழித்து விடுகிறார்.கர்ப்பம் அடைந்த மோகினிக்கு குழந்தை பிறக்கிறது.
அந்த முறை தவறி ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த குழந்தை பெரிய தெய்வமாகி விடுகிறது.
ஏனுங்கோ
அந்த சாமிக்கு அந்த மோகினி ஒரு ஆண் என்பது தெரியாதுங்களா?
அப்பெல்லாம் போக்ஸோ சட்டம் இல்லைங்களா?
என்ன ஒரு அபத்தமான கதை.இது போல் ஒரு 100 கதைகள்.கதை சொல்பவர்கள் எல்லாம் அந்த சாமிகளுடன் கூட இருந்து எல்லாவற்றையும் பார்த்த மாதிரியே வர்ணிப்பார்கள்.
நம் முன்னோர்கள் எந்த ஒரு பண்டிகையையும் ஏதோ ஒரு அறிவியல் அடிப்படையில்தான் ஆரம்பித்தார்கள்.
நடுவில் வந்த சிலர் இப்படி கதைகள் சொல்லி அப்பாவி மக்களை அடிமை படுத்தினர்.
இனிமேலாவது மதம் சொல்லும் அறிவியல் என்ன என்பதை சிந்திப்போம்.
ஜாதியும் இளைஞர்களும் :
நேற்று லேடி டோக் பெண்கள் கல்லூரி வளாகத்திற்குள் 5 பைக்குகளில் வந்த 'so called ' இளைஞர்கள் எல்லை மீறிபெண்கள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்கின்றனர். மாணவிகள் பதறி அடித்து ஓடுகின்றனர்.
டோல் கேட்டில் ஒரு கும்பல் அட்டகாசம்.
சில மாதங்களுக்கு முன் ரயில் மீது தாக்கும் ஒரு கும்பல்.
இவர்களுக்கு இந்த தைரியமும் திமிரும் எங்கிருந்து வருகிறது ?
ஜாதியின் பெயரால் கட் சி வைத்துக் கொண்டு இப்படிப் பட்ட இளைஞர்களை தங்கள் சுயநலத்திற்காக மூளை சலவை செய்து அடிமை படுத்தி அடிதடிக்கு பயன்படுத்துகின்றனர்.
உண்மையில் இவர்கள் செய்ய வேண்டியது என்ன .
அந்த இளைஞர்களுக்கு free coaching கொடுத்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வைக்கலாம்.
செல் போனில் மூழ்கி கிடக்கிறார்கள்.
எத்துணை பேர் I A S தேர்விற்கு தயாராகிறார்கள்?
தயார் படுத்த படுகிறார்கள்?
பஸ்ஸின் படிக்கட்டிலும் மேற்கூரையிலும் ஆடுகிறதுகள்.
கையில் பட்டாக்கத்தியுடன் ரயிலில் தண்டவாளத்தில் தேய்க்கிறதுகள்.
பைக் சாகசம் செய்கிறேன் என்று ஒரு குரூப் .
போதிய அளவு பஸ் விடவேண்டும் என்று ஒரு பேட்டி கொடுக்கிறது இன்னொரு ஜந்து .
ஒரு மாணவனுக்கு ஒரு பஸ் என்று விட்டாலும் இந்த விசித்திர ஜந்துக்கள் ( அவதார் படத்தில் வரும் ஏலியன்கள் போல் ) படிக்கட்டில்தான் தொங்கும்.
குரங்குகள்தான் மர கிளையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு தொங்கும்.எனக்கு அந்த காட்சிதான் நினைவிற்கு வரும்..யாரும் இவர்களை திருத்த விரும்பவில்லை.
இந்த ஜந்துக்களும் திருந்த விரும்பவில்லை.
காலம் கலிகாலம்